தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்.. என்னென்ன படங்கள் ரிலீஸ் தெரியுமா

Advertisement

பொதுவாக விழா நாட்களில் புதிய படங்கள் கொஞ்சம் அதிகமாகவே வெளியாகும். இந்த தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல படங்கள் திரைக்கு வந்திருக்கிறது. இந்த வார ரிலீஸாக எந்தந்த படங்கள் வெளியாகிறது என்கிற சிறிய தொகுப்பு இதோ....

வீக் எண்ட் சினிமா

நம் லிஸ்டில் முதல் படம் கேங்க்ஸ் ஆஃப் மெராஸ். தயாரிப்பாளர் சி.வி.குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். வேலு பிரபாகரன், நரேன், டேனியல் பாலாஜி, பகவதி பெருமாள், சாய் ப்ரியங்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஏ சான்றிதழுடன் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் குப்பத்துராஜா வெளியானது. இந்த வாரம் வாட்ச்மேன் படம் வெளியாகிறது. த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். ஜி.விக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார் தவிர லீட் ரோலில் யோகிபாபுவும் நடித்துள்ளார்.

அடுத்ததாக, ஸ்ரீகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்க வெளியாகியிருகும் படம் ராக்கி தி ரிவெஞ்ச். இப்படத்தில் நாய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் வெளியாகும் மூன்று படங்களுமே த்ரில்லர்,க்ரைம் ஜானர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் மம்முட்டி, ஜெய் நடிப்பில் வெளியாகும் படம் மதுர ராஜா . தெலுங்கில், கிஷோர் திருமலா இயக்கத்த்ல் சாய் தரம் டேஜ் ஹீரோவா நடிக்க அவருக்கு ஜோடியா கல்யாணி பிரியதர்ஷனும் நிவேதா பெத்துராஜும் நடித்திருக்கும் படம் சித்ரலாஹரி. கன்னடத்தில் புனித்ராஜ் குமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் காவலுடாரி. ரிஷி லீட் ரோலில் நடித்திருக்கும் இப்படத்தில் நாயகியாக ரோஷ்னி நடித்திருக்கிறார். இப்படமும் ஒரு க்ரைம் த்ரில்லர் கதை தான். மூன்று மொழிகளில் இருந்தும் இந்த மூன்று படங்கள் வெளியாகிறது.

அடுத்து ஹாலிவுட்டில் இருந்து இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது. நெய்ல் மார்ஷல் இயக்கத்தில் டேவிட் ஹர்போர் லீட் ரோலில் நடிக்க வெளியாகும் படம் ஹெல்பாய். முதல் இரண்டு பாகங்கள் வெளியாகி ஹிட்டானதால், இப்போது மூன்றாவது பாகம் வெளியாகியுள்ளது. அடுத்ததா, பெட் சிமட்ரி என்கிற நாவலை தழுவி உருவாக்யிருக்கும் படம் ‘பெட் சிமட்ரி’. கெவின் கோல்ஷ், டேன்னிஸ் விட்மைர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம், குழந்தைகள் விரும்பும் ஹாரர் படமா இருக்கும்.

ஆக, இந்த வாரம் திரையரங்குக்கு செல்லும் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு பெஸ்ட் த்ரில்லர் விருந்து காத்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். ஏனெனில் இந்த வாரம் வெளியாகும் எட்டு படங்களில் ஆறு படங்கள் த்ரில்லர் ஜானர். இந்த தமிழ் புத்தாண்டை புதுப்படங்களுடன் கொண்டாடி மகிழுங்கள்!

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>