நெஞ்சு படபடப்பு: என்ன செய்வது?

Palpitations - How To Handle It?

by SAM ASIR, Jun 7, 2019, 18:05 PM IST

இதய நோய் - உலகமெங்கும் மக்களின் உயிரைப் பறிக்கும் நோய்களுள் ஆபத்தானது இது.

மனஅழுத்தம் மிகுந்த இந்தக் காலகட்டத்தில் யாருக்கு எப்போது மாரடைப்பு வரும் என்பதை கணிக்க இயலவில்லை. நாற்பது வயதுக்கு மேல் அனைவரும் ஆண்டுதோறும் உடற்பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டாலும், அதை விட குறைந்த வயதுள்ளவர்களும் இதயம் பழுதுபடுவதால் மரணத்தை தழுவுகிறார்கள். ஆகவே, இதய ஆரோக்கியம் குறித்த பயம் அனைவருக்கும் இருந்துகொண்டே உள்ளது.

எது இதய கோளாறு, எது இயல்பான படபடப்பு என்று பிரித்தறிவது சிரமமாக இருப்பதால் சில நேரங்களில் தேவையற்ற பயம் மக்களை பிடிக்கிறது. நெஞ்சு படபடப்பு ஏற்பட என்ன காரணம்? அவற்றுள் எதை ஆபத்தானவை? என்று சில குறிப்புகள்:
இதய துடிப்பின் வேகம் அதிகரிப்பது, குறைவது மற்றும் இதய துடிப்பை உணர முடியாமல் போவது என்று நெஞ்சு படபடப்பில் பல வகை உள்ளது.

இயல்பான, ஆபத்தற்ற படபடப்பு

உடற்பயிற்சி செய்த பின்னர் அல்லது ஏதாவது உணர்ச்சி வசப்படும் தருணத்தில் ஏற்படும் இதய படபடப்பு இயல்பானது. காய்ச்சல், உடல்வலி, பயம், மனக்கலக்கம் போன்றவை ஏற்படும் நேரங்களில் இதயம் படபடப்பது இயல்பானது. ஓய்வெடுத்தால், நோய் குணமானால் இவ்வகை படபடப்பு மறைந்துபோகும். ஆகவே, இதற்கு தனி மருத்துவ கவனிப்பு அவசியமல்ல.

இயல்பற்ற படபடப்பு

இதயத்தில் ஏற்படும் கோளாறு காரணமாக படபடப்பு தோன்றினால் அது ஆபத்தின் அறிகுறி. இவ்வகை படபடப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ கண்காணிப்பு அவசியம். நெஞ்சு பாரம், நெஞ்சு வலி, வியர்வை, பெலவீனம், மயக்கம், தலைசுற்றல், வாந்தி மற்றும் வலிப்பு போன்ற உடல் நடுக்கம் ஆகியவை நெஞ்சு படபடப்புடன் இணைந்து ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும்.

நெஞ்சு படபடப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

நெஞ்சு படபடப்பு ஏற்பட்டால் பதற்றப்படக்கூடாது. அமைதியாக அருகில் இருப்பவர்களை உதவிக்கு அழைக்கலாம். இது போன்ற சமயத்தில் நீங்கள் வாகனங்களை செலுத்தக்கூடாது. ஆட்டோ அல்லது வாடகை வாகனத்தில் அருகிலுள்ள மருத்தவமனைக்கு சென்று விடுவது நலம்.

உங்களுடன் இருப்பவருக்கு நெஞ்சு படபடப்பு ஏற்பட்டால், நெஞ்சை அழுத்தி துடிக்க வைக்க (CPR - cardiopulmonary resuscitation) முயற்சிக்கலாம். உங்கள் முயற்சி பலனளிக்கவில்லையென்றால் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லவேண்டும்.
நெஞ்சு படபடப்பும் மருத்துவரும்

நெஞ்சு படபடப்புக்கு சிகிச்சையளிக்கக்கூடியவர் எலக்ட்ரோபிஸியாலஜிஸ்ட் (Electrophysiologist)என்ற சிறப்பு மருத்துவராவார். இதய துடிப்பு அறிந்து சிகிச்சையளிப்பதில் இவர் நிபுணத்துவம் வாய்ந்தவராக இருப்பார்.

இதய துடிப்பை அளவிடும் இசிஜி (Electrocardiography) உள்ளிட்ட பரிசோதனைகளை இவர் செய்வார்.

இபிஎஸ் (Electrophysiology study)என்னும் எலக்ட்ரோபிஸியாலஜி டெஸ்ட் செய்து அவர் பரிசோதிப்பார். இதற்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஆகும். மருத்துவமனை ஒன்றில் நீங்கள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட பின்னரே இச்சோதனையை செய்ய முடியும். பரிசோதனை முடிந்ததும் அன்றே வீட்டுக்கு வந்து விடலாம்.

இந்தச் சோதனை செய்தபின்னர், தேவைப்பட்டால் அவர் மருந்துகளையோ, மின்அதிர்வு முறையை பயன்படுத்தியோ படபடப்பை நிறுத்தும் சிகிச்சையை தருவார்.
நெஞ்சு படபடப்பை அலட்சியம் செய்யாதீர்கள்; இதய நோய் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும்.

Related Links:-

மாரடைப்பு, இதய செயலிழப்பு: இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

மாரடைப்பு (Heart Attack), இதய செயலிழப்பு (Cardiac Arrest) இரண்டும் ஒரே பொருளில் பல இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டும் ஒன்றுதானா அல்லது இவற்றுக்கிடையே வேறுபாடு உள்ளதா? மாரடைப்பு, இதய செயலிழப்பு இரண்டும் வேறானவை. https://tamil.thesubeditor.com/news/lifestyle/15589-what-differences-between-heart-attack-cardiac-arrest.html

இதய பாதிப்பின் அறிகுறிகள் எவை தெரியுமா?

'இதயம்' காதலுக்கு மட்டுமல்ல; வாழ்தலுக்கும் முக்கியமானது. அதிகமானோரின் உயரிழப்புக்கு மாரடைப்பும், மூளை இரத்தக்குழாய் அடைப்புமே காரணமாகின்றன. இதய தசைகளுக்கு போதிய அளவு இரத்தம் கிடைக்காதபோது, அதன் இயக்கம் தடைபட்டு உயிரிழப்புக்குக்கூட காரணமாகி விடுகிறது. https://tamil.thesubeditor.com/news/health/15415-known-risk-factors-for-heart-disease.html

இரவில் சாப்பிடுவதற்கு தாமதமா? மாரடைப்பு வருமாம்!

இரவு உணவை தாமதமாக சாப்பிடுகிறவர்களுக்கும் காலை உணவை தவிர்ப்பவர்களுக்கும் இதய கோளாறுகள் வரக்கூடும் என்று பிரேசில் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டவர்கள் இந்த விஷயத்தில் அதிக கவனமாக இருக்கவேண்டுமாம். https://tamil.thesubeditor.com/news/health/13076-having-food-late-night-may-result-heart-attack.html

இப்போதானே பேசினார்...? - மாரடைப்பின் காரணங்கள்

கைகள், முதுகுக்கு பரவும் நெஞ்சு வலி: மார்பின் நடுப்பக்கத்தில் வலி உருவாகி, அது கைகள், கழுத்து மற்றும் முதுகு ஆகியவற்றுள் ஏதாவது ஒரு பகுதிக்கு பரவினால் எச்சரிக்கையடையுங்கள். ஏதாவது வேலை செய்தால் நெஞ்சு வலி அதிகரிப்பதும் மாரடைப்பின் அறிகுறிதான். இதய வலியோடு வியர்வை, தலைசுற்றல் மற்றும் நினைவிழப்பு ஆகியவை இருத்தல். சிலருக்கு அடிவயிற்றில் வலி மற்றும் வாந்தி ஆகியவையும் இருக்கக்கூடும். https://tamil.thesubeditor.com/news/health/12961-heart-most-effective-ways-to-keep-it-healthy.html

You'r reading நெஞ்சு படபடப்பு: என்ன செய்வது? Originally posted on The Subeditor Tamil

More Lifestyle News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை