கோடை இரவில் நன்றாக உறங்குவது எப்படி?

by SAM ASIR, Jun 8, 2019, 13:41 PM IST

பகல் முழுவதும் வெயிலில் அலைந்த களைப்பில் இரவில் சற்று தூங்கி இளைப்பாறலாம் என்றால் புழுக்கம் தூங்க விடாது. கோடை மாதங்களில் உறங்க இயலாமல் தவிப்போர் எண்ணிக்கை ஏராளம். அதிலும் ஏ.சி என்னும் குளிர்சாதன வசதி இல்லாத அறை என்றால் கேட்கவே வேண்டாம். அது இருந்தாலும் அடிக்கடி வரும் மின்வெட்டு, நம்மை புழுக்கத்துக்குள் தள்ளிவிடும். சரி, எப்படியாவது தூங்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ளவேண்டுமானால் நாம் என்னென்ன செய்யலாம்?

அறையை குளுமையாக்குங்கள்

இரவு நன்றாக உறங்குவதற்கான ஏற்பாடுகளை பகலிலேயே ஆரம்பித்துவிடுங்கள். வெளியே அனல்காற்று வீசினால், உங்கள் அறையின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை திறக்காமல் இருப்பது நல்லது. உள்ளே இருக்கும் காற்றைக் காட்டிலும் வெளியே இருக்கும் காற்று வெப்பமாக இருந்தால், அது உள்ளே வந்தால் அறையையும் வெப்பமாக்கிவிடும். ஆகவே, அவற்றை திறக்காமல் விடுங்கள்.

உடலை குளுமையாக்குங்கள்

படுப்பதற்கு முன்னர், உடலில் துடிப்பு இருக்கக்கூடிய மணிக்கட்டு மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளை குளுமையாக்குவதன் மூலம் உடலை சற்று குளிர்ச்சியாக்கலாம். ஈரத்துணியை கழுத்து மற்றும் கையின் மணிக்கட்டுப் பகுதியில் சற்று நேரம் போடலாம். இரத்தநாளங்கள் தோலை ஒட்டியே அமைந்துள்ளன. ஆகவே, மணிக்கட்டு மற்றும் கழுத்தை குளிர்ச்சியாக்கினால் உடலின் வெப்பநிலையை சற்று குறைக்கலாம். ஒரு வாளியில் குளிர்ந்த தண்ணீர் வைத்து பாதங்களை அதனுள் மூழ்கும்படி வைக்கலாம்.

வெதுவெதுப்பான நீரில் குளியல்

கோடைக்காலத்தில் இரவில் படுப்பதற்கு முன்னர் வெதுவெதுப்பான நீரில் குளிக்கவேண்டும் என்பது வித்தியாசமானதான தோன்றலாம். வெதுவெதுப்பான நீரில் குளிப்பதால் நம் உடல் வெப்பமான சூழலுக்குப் பழக்கப்படுத்தப்படுகிறது. 2018ம் ஆண்டு வெளியான ஓர் ஆய்வு முடிவின்படி, வெந்நீரில் குளிக்கும் ஓட்டப்பந்தய வீரர்கள் களத்தில் முன்பை காட்டிலும் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இரவு உணவு

கோடைக்காலத்தில் இரவு படுக்கச்செல்லும் முன்பு செரிப்பதற்கு நேரமெடுக்கும் உணவுகளை தவிர்த்துவிடுங்கள். அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவை செரிப்பதற்கும், அவற்றின் ஆற்றல் பயன்படுத்தப்படுவதற்கும் அதிக காலம் தேவை. அப்படி செரிமானம் நடக்கும்போது உடல் இயல்பாகவே சூடாகும். அதுபோன்று மதுவகைகளையும் உட்கொள்ளக்கூடாது.

பருத்தி ஆடைகள்

இடைஞ்சல் இல்லாமல் உறங்குவதற்கு இலேசான, தளர்வான உடைகளை இரவில் அணியவேண்டும். இயற்கை பருத்தி உடைகள் வியர்வையை எளிதாக உறிஞ்சக்கூடியவையாதலால் அவற்றை அணிந்துகொள்ளலாம். உறக்கம் இனிமையாக அமையும்.

மின்சாதனங்களை அணைத்துவிடுங்கள்

மின்சாதனங்கள் இணைப்பில் இருந்தால் அவை இயங்கும்போது வெப்பம் வெளிப்படும். அது சுற்றுச்சூழலையும் வெப்பமடையச் செய்யும். ஆகவே, இரவு உறங்குவதற்கு முன்பு தேவையில்லாத சாதனங்களை மின் இணைப்பிலிருந்து எடுத்துவிடுங்கள். இது மின்சாரத்தை சேமிப்பதோடு, சூழல் வெப்பமாவதையும் தடுக்கும்.

தரைத்தளத்தில் உறங்குங்கள்

நீங்கள் தனி வீட்டில் வசிப்பவராயின், கோடைக்காலத்தில் மேற்தளத்திலுள்ள படுக்கையறையில் படுக்காமல், தரைத்தளத்திற்க மாறிக்கொள்ளலாம். கீழ்த்தளங்கள் எப்போதுமே மேற்தளங்களைவிட வெப்பமாக இருக்கும்.
குட் நைட்! ஹேங் நைஸ் ட்ரீம்ஸ்!

Get your business listed on our directory >> - https://directory.thesubeditor.comMore Lifestyle News

அதிகம் படித்தவை