ஃபிட்னஸ் பற்றிய தவறான நம்பிக்கைகள் எவை தெரியுமா?

'சிக்ஸ்பேக்', 'கட்டுமஸ்தான உடல்' என்று உடலை கச்சிதமாக வைத்துக்கொள்ளவது குறித்து பல்வேறு வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. பெண்களும்கூட 'சிக்'கென்று தோற்றமளிக்கவே விரும்புகின்றனர். பெண்களுக்கென்று பிரத்யேக பயிற்சியாளர்களை உடற்பயிற்சிக்கூடங்கள் (ஜிம்) நியமித்துள்ளன.

ஆனால், உடற்பயிற்சி பற்றி, கட்டான உடலமைப்பு பற்றி பல தவறான நம்பிக்கைகள் நம்மிடம் உள்ளன. அவற்றை களைந்தால், நிச்சயமாக தெளிவான இலக்குகளை அமைத்துக்கொள்ளலாம். சரியான வழிமுறைகளை கையாண்டு 'சிக்'கென வலம் வரலாம்.
தசை, கொழுப்பாக மாறுமா?

தசை, கொழுப்பு இரண்டுமே வெவ்வேறு வகை திசுக்கள். அவை இரண்டும் ஒன்று மற்றொன்றாக மாறுவதற்கு வாய்ப்பே இல்லை. உடற்பயிற்சி செய்வதை நீங்கள் நிறுத்திவிட்டால், உங்கள் கொழுப்பு செல்களின் அளவு பெரிதாகும். தசைநார்கள் சுருங்கிவிடும். ஆகவே, உடல் தொளதொளப்பாக தோற்றமளிக்கும்.
கொழுப்பை காட்டிலும் தசைக்கு கூடுதல் எடை உண்டா?

ஒரு கிலோ கொழுப்பு ஒரு கிலோவும், ஒரு கிலோ தசை ஒரு கிலோவும்தான் இருக்கும். கன அளவில்தான் குழப்பம் வருகிறது. தசை, அடர்த்தியாகவும் இறுக்கமாகவும் காணப்படும். உதாரணமாக, ஒரு கிலோ எடையுள்ள கொழுப்பு அடைத்துக்கொள்ளும் இடத்தை நிரப்புவதற்கு நான்கு கிலோ தசை தேவைப்படலாம். ஆகவே, கொழுப்பு குறையும்போது, உடல் எடையில் மாற்றம் இல்லாவிட்டாலும், உடல் மெலிந்ததுபோன்ற தோற்றம் ஏற்படுகிறது.

கொழுப்பு உணவை சாப்பிட்டால் கொழுப்பு ஏறுமா?
ஆரோக்கியமான அல்லது நல்ல கொழுப்பு சாப்பிட்டால் அது மெலிந்த தோற்றத்தையே அளிக்கும். உதாரணமாக, குறைந்த கொழுப்பு உணவுகளை சாப்பிடுபவர்களை காட்டிலும் ஆலிவ் ஆயில் என்னும் ஒலிவ எண்ணெய், பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு போன்ற கொட்டை வகை உணவுகளை கொண்ட மத்திய தரைக்கடல் வகை உணவு வழக்கத்தை கொண்டவர்களுக்கு எடை அதிகமாக குறையும். மீன், அவோகடா, ஒலிவ எண்ணெய் ஆகியவற்றில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 வகை கொழுப்புகள் உள்ளன.

பூரிதமல்லாதஒற்றைவகை கொழுப்பான இவை வயிறு நிறைந்ததுபோன்ற உணர்வை தரும். ஆகவே, அதிகமாக சாப்பிடவும் இயலாது. ஒரு நாளில் நமக்குத் தேவையானதை காட்டிலும் அதிக கலோரி (ஆற்றல்) அடங்கிய உணவினை உட்கொண்டால், உடம்பில் கொழுப்பு சேரும் என்பதே உண்மை.

உடலில் கொழுப்பு குறைவது பார்த்தால் தெரியுமா?
உடலுக்கு ஆற்றல் தேவைப்பட்டால், அது உடலின் அனைத்து கொழுப்பு செல்களிலிருந்தும் எடுத்துக் கொள்ளும். நாம் விரும்பும் பகுதியிலுள்ள கொழுப்பை மட்டும் கரைக்காது என்பதே உண்மை. உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பு எல்லா பக்கமிருந்தும் குறையும். உடலில் முதலாவது எந்த இடத்தில் கொழுப்பு சேர ஆரம்பிக்கிறதோ, அந்த இடத்திலிருந்து கடைசியாகவே கொழுப்பு கரைய ஆரம்பிக்கும். முதன்முதலில் அதிகமாகும் கொழுப்பு எளிதாக சேரக்கூடிய உடலின் பாகங்களில் சேர்த்துவைக்கப்படுகிறது. உடலின் பின்பக்கமுள்ள கொழுப்பு கரைய ஆரம்பித்தால், அதன்பின் பயிற்சிகள் மூலம் தசைகளுக்கு கட்டமைப்பை அளிப்பது எளிது.

ஒரே நேரத்தில் தசையை வலுப்படுத்தி, கொழுப்பை கரைக்க இயலுமா?
உடலிலுள்ள கொழுப்பை கரைப்பதற்கு, நீங்கள் சாப்பிடுவதை காட்டிலும் அதிக கலோரியை (ஆற்றல்) இழக்க வேண்டும். இது நிகழும்போது, உடலிலுள்ள தசையும் சிறிது கரையும். உடல் எடை குறையும்போது, தசையின் நிறை குறைவது இயல்பானதே. அதிக புரதம் சாப்பிடுவதன் மூலம் தசை நிறை குறைவதை தவிர்க்க முடியும். எடை குறைப்பு பயிற்சியில் ஈடுபடுவோம், அதிக புரதம் (புரோட்டீன்) சாப்பிடுவதன் மூலம் தசை நிறையை குறையாமல் பாதுகாத்து கொள்கின்றனர். புரதம் உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்களை அளிக்கிறது.

ஆகவே, அமினோ அமிலங்களை பெற்றுக்கொள்வதற்கு தசையை கரைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது. உதாரணமாக, 63 கிலோ எடையுள்ள பெண்மணி, காலை, மதியம் மற்றும் இரவு உணவு ஒவ்வொன்றிலும் குறைந்தது 25 கிராம் அளவு புரதம் இருப்பதாக பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போது, உடல் எடை குறைந்தாலும் தசையின் நிறை குறையாமல் காக்கலாம்.

Advertisement
More Lifestyle News
stop-believing-this-myths-about-fitness
ஃபிட்னஸ் பற்றிய தவறான நம்பிக்கைகள் எவை தெரியுமா?
Plants-and-herbs-that-improve-your-sleep
'தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே' - உறங்க உதவும் தாவரங்கள்
How-to-clear-all-activities-history-from-YouTube-
யூடியூப்பில் பார்த்த வீடியோ விவரத்தை அழிப்பது எப்படி?
Is-brown-fat-good-for-your-health-
உடல் பருமன், நீரிழிவு குறைபாடுகளை தடுக்கும் பிரெளன் ஃபேட்
Myths-and-Facts-About-Ringworm
படர் தாமரை பாதிப்புக்கு ஆன்ட்டிபயாட்டிக் சாப்பிடலாமா?
How-to-impress-the-interviewer
இண்டர்வியூவில் அசத்துவது எப்படி?
Is-there-a-expiry-date-for-condom
'காண்டம்' - காலாவதி தேதி உண்டா?
Things-to-be-added-every-day-in-diet
அன்றாடம் சாப்பிட வேண்டிய ஐந்து பொருள்கள்
lies-that-cause-damage-to-your-love
காதல் தொடர வேண்டுமா? இந்தப் பொய்களை சொல்லாதீர்கள்!
Apps-removed-from-Play-Store-by-Google
சூப்பர் செல்ஃபி உள்பட 85 செயலிகளை அகற்றியது கூகுள்
Tag Clouds