உடல் எடையை குறைக்க மெனக்கெடுவது போல், உடல் எடையை கூட்ட அவ்வளவு சிரமப்பட தேவை இல்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள வழி முறைகளை பின்பற்றினாலே போதும். அவைகள் குறித்து தற்போது பார்ப்போம்..
பால், முட்டை, வாழைப்பழம் இது மூன்றையும் தினமும் உண்ணு வந்தால் விரைவில் உடல் எடை கூடும்.
உலர் திராட்சையில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள், பல ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.
ஓட்ஸில் அதிக இரும்புச்சத்து இருப்பதால் இது உடலுக்கு சீரான ரத்த ஓட்டம் அளிப்பதோடு உடலும் எடையும் அதிகரிக்கும்
கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உருளைக்கிழங்கை வேக வைத்து உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் உடல் எடை விரைவில் அதிகரிக்கும்.
50 கிராம் வெந்தயத்தை வேக வைத்து அதனுடன் நெய், வெல்லம் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஈஸ்ட்ரோஜென் அதிகரித்து உடம்பு குண்டாகிவிடும்.
கொழுப்பு சத்து அதிகமிருப்பதால் வெண்ணெயை தினமும் சாப்பிட்டால் உடல் பருமனடையும்.
வேர்க்கடலை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் அதிகரிக்கும்.
மோர் கலந்த பழைய சாதம், கேழ்வரகு கூழ், தயிர் சாதம், உருளை சிப்ஸ், ஐஸ்க்ரீம், சாக்லெட் போன்றவை உடல் எடையை கூட்ட உதவும்.
சோயா பொருட்கள், கொண்டை கடலை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது உடல் பருமனாக உதவும்..