இளமைதோற்றத்தை தக்க வைக்கும்... பாலூட்டும் தாய்மார்க்கு உதவும்...

சில சத்துகளை நம் உடல் சேர்த்து வைக்க இயலாது. அவற்றை நாம் தினமும் சாப்பிடுவதை தவிரவேறு வழியில்லை. அப்படிப்பட்ட சத்துகளில் ஒன்று வைட்டமின் சி. இது நீரில் கரையக்கூடியதாகையால் சேர்த்து வைக்கப்பட முடியாத ஒன்றாகும். உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கக்கூடிய வைட்டமின் சி, நம் வாழ்க்கை முறை காரணமாக, புகை பிடித்தல், மது அருந்துதல், போதை மருந்து பயன்படுத்துதல் ஆகியவற்றின் காரணமாகவும் குறைந்து போகிறது.

இளமையை காக்கும்
நம் உடலில் கொலோஜன் என்ற புரதம் இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகிறது. வயது அதிகமாகும்போது இந்த கொலோஜனின் உற்பத்தி குறைகிறது. அதன் காரணமாகவே உடலில் சுருக்கங்கள் தெரிகின்றன; முதுமை தென்படுகிறது. வைட்டமின் சி உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, இளமையாக காட்சியளிக்கலாம்.

சிசுவுக்குத் தேவை
கர்ப்பிணிகளுக்கு மற்ற பெண்களைக் காட்டிலும் வைட்டமின் சியின் அளவு குறைவாக இருக்கும். கருவிலிருக்கும் குழந்தைக்கு வைட்டமின் சி கடத்தப்படுவதால், தாயின் உடலில் இதன் அளவு குறைகிறது. கருவிலிருக்கும் குழந்தைக்கும் வளரும் குழந்தைகளுக்கும் வைட்டமின் சி சத்து அவசியம். கர்ப்பிணிகளுக்கு வைட்டமின் சி சத்து குறைவதால் உடல் நலம் கெடக்கூடும். ஆகவே, வைட்டமின் சி குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்
மன அழுத்தம் ஹார்மோன் உற்பத்தியை பாதிக்கிறது; பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மன அழுத்தத்திற்குக் காரணமாகும் உடல் மற்றும் மன ரீதியாக பிரச்னைகளை வைட்டமின் சி குறைக்கிறது. மன அழுத்தத்திற்குக் காரணமாகும் ஹார்மோனின் அளவை குறைப்பதால் இரத்த அழுத்தம் உயராமல் கட்டுக்குள் வைக்கப்படுகிறது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்கப்படுவதால் இதய நோய் தடுக்கப்படுகிறது. உணவிலிருந்து இரும்புச் சத்தை உடல் உறிஞ்சிக்கொள்வதற்கு உதவும் வைட்டமின் சி, ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவும் வயது வரம்பும் 13 முதல் 15 வயது இளம்பெண்கள் - 66 மில்லி கிராம், 16 முதல் 18 வயது இளம்பெண்கள் - 68 மில்லி கிராம், பெண்கள் 65 மில்லி கிராம், கர்ப்பிணிகள் 80 மில்லி கிராம், பாலூட்டும் தாய்மார் 115 மில்லி கிராம்.

வைட்டமின் சி அதிகமாக காணப்படும் உணவுகள்
ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, தக்காளி, கிவி, பிரெக்கொலி, உருளைக்கிழங்கு இவற்றில் அதிகமாகவும் ஆப்பிள், வாழைப்பழம் ஆகியவற்றில் குறைந்த அளவிலும் வைட்டமின் சி காணப்படுகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?

READ MORE ABOUT :