கம்ப்யூட்டர்வாசிகளே உஷார்!

நீங்கள் அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும் நபரா? இல்லை ஆன்லைனில் எப்போதும் கேம் விளையாடும் குழந்தைகளா? யாராக இருந்தாலும் சரி... நீங்கள் உஷாரா இருங்க!

கம்ப்யூட்டரை உபயோகிக்காதவர்களை இந்த உலகத்தில் காண முடியாது. உலகம் வளர வளர தொழில்நுட்பமும் வளருகிறது. அந்த தொழில்நுட்பத்திற்கு தூணாக இருப்பது கம்ப்யூட்டர்தான்…

கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலைப்பார்க்கும் போது நம் கண்கள் அதிகம் பாதிக்கின்றன. அவற்றிலிருந்து எவ்வாறு நம் கண்களை பாதுகாக்கலாம்.

இதோ! உங்களுக்கான வழிகள்!

அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலைப் பார்த்தப்பிறகு உங்கள் கண்கள் சோர்ந்து போகின்றனவா? இல்லை கண்கள் உறுத்துகின்றனவா? இல்லையென்றால் ஒருவேலை காய்ந்து உலர்ந்து போகின்றனவா?

அப்படி இருந்தால் ஒருவேலை உங்களுக்கு கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் (CVS)ஆக இருக்கலாம்.

இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக கம்ப்யூட்டரில் வேலைப்பார்க்கும் ஒவ்வொருவருக்கும் (CVS) சிவிஎஸ் வர வாய்ப்பு இருக்கிறது. அலுவலகத்தில் வேலை செய்யும் 64% லிருந்து 90% பேர் (CVS) சிவிஎஸ் ஆல் பாதிக்கப்படுகின்றனர். இது குணப்படுத்த முடியாத நோய் இல்லை, தொடர்ந்து கம்ப்யூட்டரின் ஸ்கீரினை பார்ப்பதால் ஏற்படும் பாதிப்பு.

இப்பாதிப்பிலிருந்து நமது அழகான கண்களை பாதுகாக்க சிறந்த வழிகள்:

1.20-20-20 விதி:

நீண்ட நேரம் கம்ப்யூட்டரின் முன் வேலை செய்பவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய விதி. இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை, கம்ப்யூட்டரின் திரையில் இருந்து பார்வையை விளக்கி, 20 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளை 20 நொடிகள் உற்று பார்க்க வேண்டும்.

2.கண்களை அடிக்கடி சிமிட்டிக் கொள்ளுங்கள்:

நீங்கள் கம்ப்யூட்டரில் வேலை செய்யும் போது, சிறிது நேரத்திற்கு ஒருமுறை உங்கள் கண்களை சிமிட்டிக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் கண்களில் இயற்கையாக உருவாகும் நீர்ச்சத்து நிலைத்திருக்கும்.

3.வெளிச்சத்தின் அளவைக் குறைத்தல்:

நீங்கள் கம்ப்யூட்டரில் வேலை செய்யும் போது, உங்களுக்கு தேவையான அளவில் வெளிச்சத்தை குறைத்து வைக்க வேன்ண்டும். இதனால் கண்களுக்கு எந்த ஸ்ட்ரைனையும் தராது.

4.கண் பார்வை தூரத்தை சரிசெய்தல்:

கம்ப்யூட்டருக்கும் உங்களுக்கும் போதுமான அளவு தொலைவு விட்டு கம்ப்யூட்டரைப் பயன்படுத்தவும். இதனால் உங்கள் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

5.உள்ளங்கைகளை தேய்த்து கண்களில் மசாஜ் செய்யுங்கள்:

உங்கள் உள்ளங்கைகளை நன்கு தேய்த்து, சூடு பரப்புங்கள். பின் உள்ளங்கைகளை கண்களின் மேல், 60 நொடிகள் ஒற்றி எடுக்க, களப்படைந்த உங்கள் கண்களுக்கு ஆறுதலாக இருக்கும். இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து செய்யுங்கள்.

6.கண் கூசும் ஒளியை தவிர்த்தல்:

நீங்கள் வேலை செய்யும் இடத்தில் சரியான ஒளி அமைப்புகளை அமைத்திடுங்கள். அறையின் ஜன்னல்கள் மற்றும் சீலிங்குகளில் இருந்து வரும் ஒளியானது கண்களை கூசும், அதோடு கம்ப்யூட்டரை அடையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் எழுத்துக்கள் தெளிவாக தெரியாமல் கண்களை ஸ்ட்ரைன் செய்ய நேரிடும்.

7.பச்சை நிறத்தைச் சற்றுப் பாருங்கள்:

கண்களுக்கு நிம்மதி அளிக்கும் வண்ணம் பச்சையாகும். தொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலைப்பார்க்கும் போது சிறிது நேரம் ஜன்னலின் வழியே பச்சை நிற மரச் செடிகளை பாருங்கள் அப்படி இல்லையெனில் கம்ப்யூட்டரின் திரையின் வால்பேப்பரை பச்சை நிறத்தில் மாற்றுங்கள்.

8.கண்ணாடிகளைப் பயன்படுத்துங்கள்:

கம்ப்யூட்டர் கண்ணாடிகள் கடைகளில் விற்கின்றனர். இந்த கண்ணாடிகள், கண் கூசும் ஒளியை குறைத்து, தெளிவை அதிகப்படுத்தி, உங்கள் கண்களின் ஸ்ட்ரைனை சரி செய்து உங்கள் கண்களை ரிலாக்ஸ் செய்கிறது.

மேலே கூறிய வழிகளை பின்பற்றும் போது உங்கள் கண்கள் எந்த பாதிப்பும் இன்றி, உங்கள் அழகை மேலும் அதிகரிக்க செய்யும்.

 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

 

Recent Videos

Recent News

Most Read News

more headlines in our related posts

Related # news