யோகாசனம்: உயரத்தை அதிகரிக்க பஸ்சிமோத்தாசனம்

இளம் தலைமுறையினரை பெரிதும் பாதிப்பது வளர்ச்சியின்மை

by Vijayarevathy N, Oct 1, 2018, 08:21 AM IST

இளம் தலைமுறையினரை பெரிதும் பாதிப்பது வளர்ச்சியின்மை. சரியான காட்டுதல் இல்லையெனில் வளர்ச்சி இல்லாமலே போய்விடும். இந்த ஆசனம் குழந்தைகளின் வளர்ச்சியை அதிகரிக்க பயன்படும்.

செய்முறை:

தரையில் உட்கார்ந்து கால்களை நன்றாக நீட்டிக் கொள்ளவும். கைகளை தரையில் வைத்துக் கொள்ளவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். நார்மலாக மூச்சு விடவும். கைகளை நேராக உயர்த்தி (மூச்சை உள்ளிழுத்து) காதோடு ஒட்டி இருக்குமாறு தூக்கவும்.

அப்படியே கைகளை முன்னால் சாய்த்து, இடுப்பை வளைத்து குனியவும். பாதி வரை குனியவும். அப்படியே தொடர்ந்து குனிந்து, கை விரல்களால் கால் கட்டை விரல்களை பிடித்துக் கொள்ளவும். இதை மூச்சை வெளியே விட்டுக் கொண்டு செய்யவும்.

தலை கால் மூட்டில் பதிந்து, தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.  இந்த நிலையில் 20 நொடிகள் இருக்கவும். நார்மலாக மூச்சு விடவும்.  மூச்சை உள்ளிழுத்து தலையை முழங்கால்களிலிருந்து தூக்கி, நார்மல் நிலைக்கு வரவும்.

பலன்கள்:

 முதுகெலும்பின் வளையும் தன்மையை ஊக்குவிக்கிறது. முதுகெலும்புக் கோளாறுகள், முதுகு வலி, நீங்கும்.  அடிவயிறு தசைகள் பயனடைகின்றன. இடுப்பை சுற்றி ஏற்படும் அடிப்போஸ் கொழுப்பு சதை குறைகிறது.

இந்த யோகாசனம் மலச்சிக்கல், அஜீரணம் முதலியவற்றை குணப்படுத்துகிறது. முக்கியமாக ஆண்மைக்குறைபாடு நீங்கி வீரியத்தை பெருக்க, வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும் ஆசனங்களில் ஒன்று பஸ்சிமோத்தாசனம். தவறாமல் செய்து வந்தால் பாலியல் குறைபாடுகள் நீங்கும். பெண்களுக்கும் ஏற்றது. கணையம், சிறுநீரகம், கல்லீரல் இவற்றை ஊக்குவிப்பதால், நீரிழிவு நோயாளிக்களுக்கு ஏற்ற ஆசனம். இளம் பருவத்தினருக்கு உயரத்தையும், வளர்ச்சியையும் அதிகரிக்கச் செய்யும்.

You'r reading யோகாசனம்: உயரத்தை அதிகரிக்க பஸ்சிமோத்தாசனம் Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை