வெற்றிலை எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று பார்ப்போமா?

medical Benefits Of Betel

Oct 26, 2018, 19:16 PM IST

சுப காரியங்களிலும் சரி, துக்க காரியங்களிலும் சரி அனைத்து விசேஷங்களிலும் இவ்வெற்றிலை  இருக்கும். ஆனால் அதன் முக்கியத்துவம் தெரியாது. சரி, வெற்றிலை எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று பார்ப்போம்.

கிராமங்களில் நம் கிழவிகள் சாப்பாட்டிற்கு பதில் இந்த கொழுந்து வெற்றிலையைத் தான் இரவு பகலாக மென்று திண்பார்கள். அப்படி என்னதான் இருக்கிறது இதில்,

பொதுவாக வெற்றிலையின் குணமானது, சீதம் நீக்கும், வெப்பம் தரும், அழுகலகற்றி, உமிழ்நீர் பெருக்கும், பசியை உண்டாக்கும். பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும், நாடி நரம்பை உரமாக்கும். வாய் நாற்றத்தை போக்கும். வெற்றிலைச் சாற்று சீறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது.

வெற்றிலைச் சாற்றோடு  நீர் கலந்த பாலையும் தேவையான அளவு கலந்து பருகி வர சிறுநீர் நன்கு பிரியும். வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்து கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.

குழந்தைகளுக்கு வரும் காய்ச்சல், ஜன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில், கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சேர்த்து தேனுடன் கொடுத்து வர குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.

வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணெயில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும். வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கும் வைத்துக் கட்ட நல்ல பயன்தரும்.

சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுகு சூரணத்துடன் வெற்றிலைச் சாறு, தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும்.

5 கிராம் சூரணம் + 10 மி.லி. வெற்றிலைச் சாறு, தேன் 10 கிராம் கலந்து காலை, மாலை, நோய்க்குத் தக்கவாறு 48 -96 நாள் சாப்பிட வேண்டும்.

குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். வெற்றிலைச் சாறு நான்கு துளி காதில் விட எழுச்சியினால் வரும் வலி குணமாகும். வெற்றிலையோடு மிளகு சேர்த்து கசாயம் செய்து கொடுத்து வரலாம்.

You'r reading வெற்றிலை எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று பார்ப்போமா? Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை