டெங்கு காய்ச்சலை விரட்டி அடிக்க எளிய வழிமுறைகள்

Simple ways to banish dengue fever

by Vijayarevathy N, Oct 26, 2018, 21:44 PM IST

தமிழ் நாட்டில் தற்போது தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பரவிக் கொண்டுவருகிறது. வந்தப்பின் காற்பதை விட வருமுன் காப்பது மிகச்சிறந்தது. ஏனென்றால் சரியான பாதுகாப்பின்றி பல குழந்தைகள் இறப்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

அதோடு இந்நோய்க்கு ஆங்கில மருந்து அந்த அளவிற்கு பயன் தருவதில்லை. மேலும் டெங்கு காய்ச்சல் அதிக வீரியம் கொண்டது.

டெங்குக் காய்ச்சல்  என்ற டெங்கி காய்ச்சல் அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சல் மனிதர்களிடையே டெங்கு வைரசால் ஏற்படுகிறது. இவை ஒரு அயனமண்டலத் தொற்றுநோய் ஆகும், இது கொசுக்களால் பரவுகிறது.

 இந்நோய் வந்தால் கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள் ஏற்படும். தொற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் (கடுமையான குருதிப்போக்கை ஏற்படுத்தும்) மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறி என்பன உண்டாகும்.

இது உயிர் ஆபத்துகளை விளைவிக்கக் கூடிய ஒரு கொடிய நோயாகும். இது உடலை மிகவும் வருத்தும் நோய் ஆகையால் எலும்பை முறிக்கும் காய்ச்சல் எனவும் அழைக்கப்படும்.

சித்த மருத்துவ குறிப்புகள்:

பாதிக்கப்பட்ட நோயாளி நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு சாறுகளை காலை, மாலை ஆகிய இரண்டு வேளை அருந்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ரத்தத்தில் உள்ள தட்டை அணுக்களின் அளவு குறையாமல் பாதுகாக்கபடுவதாகச் சித்த மருத்துவம் கூறுகின்றது.

எனவே தொடர்ந்து உங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய உணவுகளை கொடுத்து நோயின் பிடியிலிருந்து காப்பாற்றுங்கள்.

You'r reading டெங்கு காய்ச்சலை விரட்டி அடிக்க எளிய வழிமுறைகள் Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை