சிலை கடத்தல் வழக்கு... சிபிஐக்கு மாற்ற அரசு கொள்கை முடிவு!

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு

Aug 1, 2018, 18:18 PM IST

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Madras High Court

தமிழகத்தில் சிலை கடத்தல் பிரச்சனை உச்சத்தை அடைந்தது. பழனியில் கோவிலில் மாற்றப்பட்ட சிலை தொடங்கி தமிழகம் முழுக்க முறைகேடாக சிலைகள் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரிப்பதோடு, சிலைகளையும் மீட்டு வருகிறது.

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, "தமிழகத்தில் இப்போதும் சிலை கடத்தல் தொடர்ந்து நடக்கிறது. மேலும் தமிழக அரசு சிலை கடத்தலை தடுக்கவில்லை என்றால் சிபிஐக்கு வழக்கை மாற்ற நேரிடும்" என ஏற்கனவே நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

அதுமட்டுமின்றி, சமீபகாலமாக பொன்.மாணிக்கவேல், அரசிடம் இருந்து தனக்கு அழுத்தம் வருவதாகவும், நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. "சிலை கடத்தல் தொடர்பான அறிக்கைகளை ஒராண்டாக பொன்.மாணிக்கவேல் தமிழக அரசிடம் தெரிவிப்பது இல்லை. அவர் விசாரிப்பதில் திருப்தியில்லை" எனவும் கூறியுள்ளது.

இதனைதொடர்ந்து நீதிபதிகள், போலீசார் மீது மாநில அரசுக்கே திருப்தியில்லை என கேள்வி எழுப்பியதுடன், கொள்கை முடிவு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

You'r reading சிலை கடத்தல் வழக்கு... சிபிஐக்கு மாற்ற அரசு கொள்கை முடிவு! Originally posted on The Subeditor Tamil

More Local news News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை