தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையால் கள்ளப்பெரம்பூர் பகுதியில் உள்ள 500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் அதிக பட்சமாக அணைக்கரையில் 51 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக தஞ்சையை அடுத்த கள்ளப்பெரம்பூர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
இதேபோல் சூரக்கோட்டை ஓரத்த நாடு பகுதியிலும் ஏராளமான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மழைநீர் வடிவதற்கான போதிய வசதி இல்லாததால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.