மனு அளிப்பதற்காக ஒரு கிலோமீட்டர் தவழ்ந்துவந்த மாற்றுத்திறனாளி!

Free TriCycle application: physically challenged person suffered to come one kilometer

by Manjula, Oct 23, 2018, 14:37 PM IST

இலவச மூன்று சக்கர சைக்கிள்கேட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காகசுமார்ஒரு கிலோமீட்டர் வரை மாற்றுத்திறனாளி ஒருவர் தவழ்ந்து வந்த சம்பவம் பார்ப்பவர்களை கலங்க வைத்தது.

விருநகர் மாவட்டம் சாத்தூர் அமீர்பாளையத்தை சேந்தவர் செல்வராஜ் . மாற்றுத்திறனாளியான இவர் இலவச மூன்று சக்கரசைக்கிள்கேட்டு விருதுநகர்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார்ஒரு கிலோமீட்டர் வரை தவழ்ந்து வந்துமனு அளித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம்பேசிய அவர்: "2003 ஆம் ஆண்டு மின்சாரம் தாக்கி இடுப்புக்கீழ் செயலிழந்து விட்டதாகவும், நடக்க முடியாமல் அமர்ந்த நிலையில் வலது கையை ஊன்றி உடலை இழுத்து தவழ்ந்து செல்வதாக தெரிவித்தார்.

தீப்பெட்டி தொழிற்சாலையில் தினசரி ரூ 70 க்கு வேலை செய்து மாற்றுத்திறனாளி மனைவியை காப்பாற்றி வருகிறேன். சுமார் 2 ஆண்டுகள் முன்பு எம்எல்ஏ நிதியில் மூன்று சக்கர வாகனம் பெற்றேன். ஆனால் அது தொலைந்து விட்டது. புதிய மூன்று சக்கரசைக்கிள் கேட்டு பலமுறை மனு அளித்தும் விசாரணை செய்து அளிப்பதாக கூறி அலைய வைக்கின்றனர்’ ’என்று தெரிவித்தார்.

இது குறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் கூறுகையில் "மூன்று ஆண்டுகள் கழிந்தால்தான் புதிய சைக்கிள் அளிக்க முடியும். மாற்றுத்திறனாளிக்கான அட்டையில் அவரது புகைப்படம் இல்லை. புதிய அட்டை வழங்கி, வரும் வாரங்களில் மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்படும்" என்று தெரிவிதார்.

You'r reading மனு அளிப்பதற்காக ஒரு கிலோமீட்டர் தவழ்ந்துவந்த மாற்றுத்திறனாளி! Originally posted on The Subeditor Tamil

More Local news News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை