திருப்பூர் அருகே போயம்பாளையத்தில் வாழும் ஒரு தம்பதி இரவு வேலைக்கு சென்றுள்ளனர்,அவர்களின் பணியின் காரணமாக சில நேரங்களில் இரவு பகல் என வேலை இருக்கும்.
அவர்களுக்கு 4 மற்றும் 6 வயது பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்,சம்பவம் நடந்த இரவு குழந்தைகள் தனிமையில் இருந்துள்ளனர், மறு நாள் காலை பெற்றோர் வீடு திரும்பி பார்த்த போது 4வயது குழந்தை அழுதுகொண்டே இருந்துள்ளது, உடனே திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது தான் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தெற்கு போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்காததால் போயம்பாளையம் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் அவர்களை சமாதனப்படுத்தி அனுப்பிவைத்துள்ளனர்.
வேலைக்கு செல்லும் பெற்றோர் குழந்தைகளை இப்படி தனியே விட்டுசென்றது மிகவும் தவறு,கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை குறைந்து விட்ட இந்த காலகட்டத்தில் குழந்தைகள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இரவு பணிக்கு இருவரும் செல்லாமல் முன்பே பேசிவைத்து யாரவது ஒருவர் வீட்டில் இருந்து குழந்ததைகளை பார்த்துக்கொண்டிருக்கலாம், இந்த வழக்கில் குற்றவாளி நிச்சியம் தண்டிக்கப்படவேண்டும் அதே நேரம் அந்த குழந்தையின் பெற்றோர் செய்ததும் மிகப்பெரிய தவறுதான். இந்த சம்பவத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டு மற்ற பெற்றோர்கள் பிள்ளைகள் வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டும்
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், 2012 நவம்பர் மாதம் ஏற்படுத்தப்பட்டது. இதுவே, இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்துக்கான முதல் விரிவான சட்டம் என்பது குறிப்பிடதக்கது