புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா நீடிக்கிறது - கிரண்பேடி உறுதி அளித்தால் மட்டுமே வாபஸ் என பிடிவாதம்!

Puducherry cm Narayana samis dharna continues third day

by Nagaraj, Feb 15, 2019, 09:32 AM IST

புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் 3-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. கிரண்பேடி உறுதிமொழி கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை வாபஸ் பெறப்படும் என்று நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மாநில அரசின் கோப்புகளில் கையெழுத்திட மறுக்கிறார், தன்னிச்சையாக செயல்படுகிறார் என்று கிரண்பேடி மீது குற்றம் சாட்டி ஆளுநர் மாளிகை முன் கடந்த புதன்கிழமை முதல் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.தமது அமைச்சரவை சகாக்கள், எம்எல்ஏக்களுடன் இரவு பகலாக நடத்தி வரும் தர்ணா போராட்டம் 3-வது நாளாக இன்றும் நீடிக்கிறது.

போராட்டம் நடைபெறும் நிலையில் ஆளுநர் கிரண்பேடி ஒரு வார பயணமாக டெல்ல சென்று விட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நாராயணசாமி, தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஆளுநர் உறுதியளித்தால் மட்டுமே போராட்டம் வாபஸ் பெறப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளதால் புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

இதற்கிடையே முதல்வர் நாராயணசாமியின் போராட்டம் அர்த்தமற்றது என்று கிரண்பேடி தெரிவித்துள்ளார். தாம் 2O-ந்தேதி தான் புதுச்சேரி திரும்புவதாகவும் 21-ந் தேதி முதல்வர் நாராயணசாமியுடன் பேச்சு நடத்தப் போவதாகவும் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

You'r reading புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா நீடிக்கிறது - கிரண்பேடி உறுதி அளித்தால் மட்டுமே வாபஸ் என பிடிவாதம்! Originally posted on The Subeditor Tamil

More Politics News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை