புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் மக்களையும் அவர்கள் தயாரிக்கும் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று மேகாலயா மாநில ஆளுநர் தடாகதா ராய் பேசியிருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.
காஷ்மீரின் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல் தேசத்தை கொந்தளிக்க வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து காஷ்மீர் மக்கள் மீது ஆங்காங்கே தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மேகாலயா ஆளுநர் தடாகதா ராய், காஷ்மீர் மக்களையும் அவர்கள் தயாரிக்கும் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது.
மேகாலயா ஆளுநரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி வலியுறுத்தியுள்ளார். இதேபோல் தேசிய மாநாட்டு கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா, எங்கள் நதியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதை நிறுத்துவீர்களா? என ட்வீட் போட்டு பதிலடி கொடுத்துள்ளார்.