மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு வரும் 25-ந் தேதி முதல் விருப்ப மனு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு தமிழக கட்சிகள் தயாராகி கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதிமுகவில் விருப்ப மனு பெறுவது கடந்த 15-ந் தேதியே முடிவடைந்து விட்டது. தேமுதிகவில் நாளை முதல் விருப்ப மனு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திமுகவிலும் நாளை மறுதினம் 25-ந் தேதி முதல் விருப்ப மனு வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் 25-ந் தேதி முதல் தலைமைக் கழகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் ரூ 25 ஆயிரம் எனவும், தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளுக்கு விண்ணப்பித்தோருக்கு கட்டணம் திரும்ப வழங்கப்படும் என்றும் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.