டிவி விவாதத்தில் தான் குடுமிப்பிடிச் சண்டை...கும்மாளம் போடும் பாஜக, காங்., ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர்கள்!

Advertisement

டிவியில் அரசியல் விவாதங்களில் குடுமிப் பிடிச் சண்டை போல் ஆவேசமாக மோதிக் கொள்ளும் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளின் பெண் செய்தித் தொடர்பாளர்கள் வெளிநாட்டுக் கடற்கரையில் ஒற்றுமையாக, உற்சாகமாக கும்மாளமிடும் புகைப்படங்கள் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லியில் ஆங்கில மற்றும் இந்தி மொழி டிவி சேனல்களில் அரசியல் குறித்த சூடான விவாதங்களில் தவறாமல் இடம் பெறுபவர்களில் காங்கிரசின் பிரியங்கா சதுர்வேதி, பாஜகவின் நூபுர் சர்மா, ஆம் ஆத்மி கட்சியின் அல்கா லம்பா ஆகியோர் முக்கியமானவர்கள்.

சூடான விவாதங்களில் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை காச்... மூச்... என கத்திக்கத்தி பேசி ஒருவருக்கொருவர் எதிரி போல் குடுமியைப் பிடிக்காத குறையாக வாதிட்டு பார்வையாளர்களையும் சூடேற்றி விடுவார்கள்.

அரசியல் விவாதமெல்லாம் சும்மா கட்சிக்காக ... நிஜத்தில் நாங்கள் நல்ல நண்பர்களாக்கும் என்று கூறி கும்மாளமிடும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கத்தார் நாட்டுக்கு 'டூர்' சென்றிருந்த மூவரும் அந்நாட்டு தலைநகர் தோகாவில் உள கரானா பீச்சில் ஓடியாடி உற்சாகமாக துள்ளி விளையாடுகின்றனர்.

மூவரும் அரசியலை மறந்து உற்சாகமாக துள்ளித் திரியும் இந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, இதுதான் நம்ம ஊர் அரசியல்வாதிகளின் நிஜ முகம். இதப் பார்த்தாவது நம்ம மக்கள் திருந்த வேண்டும். அரசியல், அரசியல் என்று ஆளுக்கொரு கட்சியில் இருந்து கொண்டு, குடும்பத்தில், உறவுகளுக்குள், நண்பர்களுக்குள் பகைமை பாராட்டாதீர்கள் என்று கமென்டுகளுடன் வைர லாகி வருகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!

READ MORE ABOUT :

/body>