சுதந்திர இந்தியாவில் பாதுகாப்புத் துறைக்கான முதல் பெண் அமைச்சர் நிர்மலா சீதாரமானா? மோடிக்கு வலுக்கும் கண்டனம்

Netizens slams PM Modi on First Women Defence Minsiter issue

by Mathivanan, Mar 2, 2019, 08:19 AM IST

சுதந்திர இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கான முதல் பெண் அமைச்சர் நிர்மலா சீதாராமன் என பிரதமர் மோடி பேசியிருப்பதற்கு சமூக வலைதளங்களில் கண்டனம் குவிகிறது.

கன்னியாகுமரியில் நேற்று பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிப் பேசினார். அப்போது, சுதந்திர இந்தியாவின் பாதுகாப்பு துறைக்கான முதலாவது பெண் அமைச்சர் தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் என குறிப்பிட்டிருந்தார்.

நிர்மலா சீதாராமன் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்காக போராடியவர். இதை குறிப்பிட்டு மோடிக்கு சமூக வலைதளங்களில் முதலில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஏற்கனவே பாதுகாப்புத் துறை அமைச்சராக இந்திரா காந்தி இருந்ததையும் சுட்டிக்காட்டி, பிரதமர் மோடி நீங்கள் பொய் சொல்வதற்கு இது வட இந்தியா இல்லை... தமிழ்நாடு என்கிற கண்டனமும் வலுத்து வருகிறது.

You'r reading சுதந்திர இந்தியாவில் பாதுகாப்புத் துறைக்கான முதல் பெண் அமைச்சர் நிர்மலா சீதாரமானா? மோடிக்கு வலுக்கும் கண்டனம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை