தேமுதிக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு, வரும் 13ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தலில், நீண்ட இழுபறிக்கு பிறகு வேறுவழியின்றி அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்துள்ளது. இவ்விவகாரத்தில் அக்கட்சி காட்டிய நிதானம், பிரேமலதா, சுதீஷ் ஆகியோரின் செயல்பாடுகள், அக்கட்சியினரையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு, நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு, வரும் 13ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று தேமுதிக தலைமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில், வரும் 13ஆம் தேதி காலை 10 மணிக்கு, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும். விஜயகாந்த் முன்னிலையில் இந்த நேர்காணல் நடைபெறும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.