24 மக்களவை, 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அமமுக வேட்பாளர்கள் - தினகரன் அறிவிப்பு

Ammk released 1st list of candidates

Mar 17, 2019, 09:09 AM IST

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி டிவி தினகரன் அறிவித்துள்ளார். முதல் பட்டியலில் 24 மக்களவைத் தொகுதிகளுக்கும், 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வேட்பாளர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலில் இடம் பெற்றுள்ள வேட்பாளர்கள் விபரம்..


1. திருவள்ளுர் - பொன். ராஜா,தென் சென்னை-இசக்கி சுப்பையா, ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் நாராயணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மதுரை - டேவிட் அண்ணாதுரை, ராமநாதபுரம் - ஆனந்த், தென்காசி - பொன்னுத்தாய், திருநெல்வேலி - ஞான அருள்மணி ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்

காஞ்சிபுரம் - முனுசாமி, விழுப்புரம் - கணபதி, சேலம் - செல்வம், நாமக்கல் - சாமிநாதன்
ஈரோடு-செந்தில்குமார், திருப்பூர்-செல்வம், நீலகிரி - ராமசாமி, கோவை - அப்பாதுரை, பொள்ளாச்சி - முத்துக்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று தினகரன் அறிவித்துள்ளார்

கரூர் - தங்கவேல், திருச்சி - சாருபாலா தொண்டைமான், பெரம்பலூர் - ராஜசேகரன், சிதம்பரம் - இளவரசன்,
மயிலாடுதுறை - செந்தமிழன், நாகை - செங்கொடி, தஞ்சை - முருகேசன், சிவகங்கை - பாண்டி ஆகிய 24 பேர் முதல் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதல் கட்டமாக 9 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் இவர்கள் 9 பேரும் ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆவர். அவர்கள் விபரம்: பூவிருந்தவல்லி - ஏழுமலை, பெரம்பூர் - வெற்றிவேல், திருப்போரூர் - கோதண்டபாணி,
குடியாத்தம் - ஜெயந்தி பத்மநாபன், ஆம்பூர் - பாலசுப்பிரமணி, அரூர் - முருகன், மானாமதுரை - மாரியப்பன் கென்னடி, சாத்தூர் - சுப்பிரமணியன், பரமக்குடி - முத்தையா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

You'r reading 24 மக்களவை, 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அமமுக வேட்பாளர்கள் - தினகரன் அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை