தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு - கள்ளக்குறிச்சியில் எல்.கே.சுதீஷ் போட்டி

Election 2019, dmdk candidates list announced

by Nagaraj, Mar 18, 2019, 13:14 PM IST

அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் விஜயகாந்தின் மைத்துனரும் தேமுதிக எல்.கே.சுதீஷ் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதிமுக கூட்டணியில் நீண்ட இழுபறிக்குப் பின் இணைந்த தேமுதிகவுக்கு வட சென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டார். வட சென்னை தொகுதியில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் போட்டியிடுகிறார்.கள்ளக்குறிச்சியில் விஜயகாந்தின் மைத்துனரும், தேமுதிக துணைச் செயலாளருமான எல்.கே.சுதீஷ் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.திருச்சியில் கட்சியின் அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவனும், விருதுநகரில் தேமுதிக கட்சியின் விசாரணைக் குழு உறுப்பினர் அழகர்சாமி ஆகியோரும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வட சென்னையில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்க்காடு வீராச்சாமியின் மகன் கலாநிதியுடன் தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.கள்ளக்குறிச்சியிலும் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் க.பொன்முடியின் மகன் கவுதம சிகாமணியுடன் கடும் போட்டியைச் சந்திக்க உள்ளார் எல்.கே.சுதீஷ். திருச்சி, விருதுநகரில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர்களுடன் தேமுதிக களம் காண்கிறது.

You'r reading தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு - கள்ளக்குறிச்சியில் எல்.கே.சுதீஷ் போட்டி Originally posted on The Subeditor Tamil

More Politics News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை