நடிகர் அஜித்தை கிண்டல் செய்தேனா? சிம்புவின் தம்பி தரப்பு விளக்கம்

நடிகர் அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என்று ட்வீட் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.

ajith

நடிகர் அஜித் நடிப்பையும் தாண்டி பைக் ரேஸ், கார் ரேஸ், ரிமோட் மூலம் இயங்கும் குட்டி வாகனங்களை இயக்குதல் போன்றவற்றில் கைதேர்ந்தவர். ஆளில்லா குட்டி விமானங்களை வடிவமைப்பது இவருக்கு கைவந்த கலை. அதுமட்டுமின்றி மிகுந்த உதவும் மனபான்மை கொண்டவர். இதனால்தான் அவருக்கு ரசிகர்கள் அதிகம். ஆனால் இதுவரை அவர் அரசியல் விவகாரங்களில் தலையிட்டது கிடையாது.

அஜித்

இந்நிலையில் இயக்குநர் சுசீந்திரன் மார்ச் 16 இரவு 10.30 மணியளவில் ஒரு ட்வீட் பதிவிட்டார். அதில், ``40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தி உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும், தமிழக மக்களின் நலன்கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100 சதவீதம் சரியான தருணம். வா தலைவா மாற்றத்தை உருவாக்கு.. உங்களுக்காகக் காத்திருக்கும் பல கோடி மக்களில் நானும் ஒருவன்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த ட்வீட்டுக்கு, அஜித் ரசிகர்கள் பலர் `` அரசியல் வேண்டாம் அஜீத்தே போதும்’’ என்று பதிவிட்டு வந்தனர். அந்த வாக்கியம் ட்ரெண்டும் ஆனது.  

சிலர் சுசீந்திரனை கடுமையான விமர்சித்தும் வந்தனர். இதனிடையே சுசீந்திரன் பதிந்த ட்வீட்டுக்கு சிம்புவின் தம்பியான குறளரசன் அஜித்தை விமர்சித்து, ``எங்கப்பன்தான்யா அடுத்த முதல்வர்’’ என்று பதிவிட்டிருந்தார்.

குறளரசன் Kuran Arasan T.Rajendar பெயரில் இயங்கிய ஃபேஸ்புக் அக்கவுண்ட்டில் `` எங்கப்பன்தான்யா அடுத்த முதல்வர்.  தீபா பேரவையுடன் சேர்ந்து லட்சிய திமுக 234 தொகுதிகளையும் கைப்பற்றும் ’’ என்று பதிவிடப்பட்டிருந்தது.

இதனால் அஜித் ரசிகர்கள் சிம்பு தம்பி குறளரசனை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்தனர். இது போலி கணக்கு என்றும் Kural Tr என்பதுதான் குறளரசனின் உண்மையான  ஃபேஸ்புக் கணக்கு என்றும் சிம்பு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்