குற்றப் பரம்பரை என்று தாம் குறிப்பிட்டது திமுக வைத்தான். ஆனால் தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக பாவிக்கும் சமூகத்துக்கு எதிராக கூறியது போல் திமுகவினர் திரித்துக் கூறுகின்றனர் என்று தமிழிசை சவுந்தரராஜன் பதறிப் போய் டிவிட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார்.
நான் கற்ற பரம்பரையில் வந்தவள், குற்றப் பரம்பரையில் வந்தவள் அல்ல என்று தமிழிசை எதுகை மோனையாக கூறியுள்ளது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும், எம்எல்ஏ வுமான நடிகர் கருணாஸ் கொதித்துப் போய், யார் குற்றப் பரம்பரை? நீங்கள் கற்ற பரம்பரை இல்லை... தமிழக உரிமைகளை விற்ற பரம்பரை நீங்கள் என்று ஆவேசம் காட்டியிருந்தார்.
தமிழிசையின் பேச்சுக்கு அடுத்தடுத்து கண்டனங்கள் எழுந்த நிலையில் பதறிப் போய் டிவிட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார்.
நேற்று வேட்பு மனு பரிசீலனையில் என் கணவர், குடும்பம் பற்றி அவதூறு பரப்பும் வகையில் புகார் செய்த திமுகவினருக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்தேன். தமிழகத்தை ஆண்ட திமுக ஊழல் குடும்பம், ஊழல் பரம்பரை, ஊழல் விஞ்ஞானிகள் பற்றித்தான் குறிப்பிட்டேன். ஆனால் தேசியத்தையும், தெய்வீகத்தையும் என் இரு கண்கள் எனக் கொண்ட என்றும் போற்றும் பரம்பரையை குறிப்பிட்டதாக வழக்கம் போல் திரித்துக் கூறும் திமுகவினரைக் கண்டிக்கிறேன் என்று பதறிப் போய் டிவிட்டரில் தமிழிசை அவசரமாக விளக்கம் அளித்துள்ளார்.