ஒழுங்கா குடிக்க தண்ணி கொடுங்கள்... இல்லாட்டி ஓட்டு கிடையாது... நோட்டாவுக்கு ஓட்டுப் போடப் போறோம் என்று சென்னை தி.நகர் வாசிகள் பகிரங்கமாகவே நோட்டீஸ் அடித்து அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தல் வந்து விட்டாலே புறக்கணிப்பு என்ற கோஷங்களும் பல பகுதிகளில் எழுவது வாடிக்கை. தங்கள் பிரச்னைக்கு தீர்வு காண இதுதான் கடைசி ஆயுதம் என்று மக்கள் மிரட்டல் விடுவது இதுவரை வழக்கமாக நடந்து வந்தது.
எப்போது நோட்டா பட்டன் ஓட்டு எந்திரத்தில் இடம்பெற்றதோ, அப்போது முதல் நோட்டாவைக் காட்டி மிரட்டல் விட ஆரம்பித்துள்ளனர் வாக்காள மகா ஜனங்கள் . சென்னையில் தற்போது தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், இந்தத் தேர்தலில் அதுவே முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
சென்னையின் இதயப் பகுதியாகவும், முக்கிய வர்த்தக மையமாகவும் திகழும் தி.நகர் பகுதி வாசிகளோ தண்ணீர் இல்லையென்றால் ஓட்டும் இல்லை. எங்கள் ஓட்டு நோட்டாவுக்குத்தான் என்றும், வரி செலுத்தும் மக்களின் பணத்தை வீணாக்குவது ஏன்? என்று கேட்டு குடியிருப்புகளின் முன் புறத்தில் பெரிய பெரிய பிளக்ஸ் பேனர்களை பகிரங்கமாக தொங்க விட்டுள்ளனர். இது அரசியல்வாதிகளுக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது என்றே கூறலாம்.
உயிரைவிடவும் தயாராக இருக்கிறோம்! அதிமுக, திமுகவுக்கு எதிராக வரிந்துகட்டும் வீரலட்சுமி