தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளையும், பிரதமர் மோடி நாளை மறுதினமும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்ய தமிழகம் வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் நாளை காலை கிருஷ்ணகிரியில் பிரச்சாரம் செய்கிறார். பின்னர் சேலம், மதுரை, தேனியில் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.
அதிமுக கூட்டணியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் போட்டியிடும் தேனி தொகுதியில் பிரதமர் மோடி ஸ்பெஷலாக நாளை மறுநாள் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக நாளை இரவே மதுரை வந்து தங்கும் பிரதமர் நாளை மறுநாள், தேனி தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டியில் நடக்கும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் ராமநாதபுரத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பிரதமர் மோடி வாக்கு சேகரிக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி ஆகியோரின் வருகையால் தமிழக தேர்தல் களத்தில் இறுதிக்கட்ட பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.