கடந்த ஆண்டு பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் அக்கட்சிக்கு 210 கோடி ரூபாய் வசூல் வந்ததாகவும், இது மொத்த தேர்தல் நிதி பத்திர வசூலில் 95 சதவீதம் என்றும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மொத்தம் சேர்த்து மிச்சம் உள்ள 11 கோடி ரூபாயை பகிர்ந்து கொண்டதாகவும் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் நேற்று அறிக்கை தாக்கல் செய்தது.
தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜக முறைகேடு செய்துள்ளதாக அரசு சாரா நிறுவனம் ஒன்று தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. வியாழக்கிழமையான நேற்று வழக்கு நடைபெற்ற போது, உச்சநீதிமன்றத்தில் இந்த தகவலை தேர்தல் ஆணையம் உறுதிபடுத்தியுது.
2016-17-ம் ஆண்டுகளில் பாஜக கட்சி தேர்தல் நிதியாக 997 கோடி ரூபாய் மற்றும் 2017-18 ஆண்டுகளில் பாஜகவுக்கு 990 கோடி ரூபாய் நிதி வசூலாகியுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு தனி நபர் அல்லது நிறுவனங்கள் ரொக்கமாகவோ அல்லது செக்காகவோ டொனேஷன் வழங்குவது தேவையற்ற சந்தேகத்தை உருவாக்கும் எனக்கூறிய மத்திய அரசு, தேர்தல் நிதி பத்திரம் மூலம் டொனேஷனை ரசீதுடன் வழங்கும் ஏற்பாடை செய்தது.
ஆனால், தேர்தல் நிதி பத்திரத்தின் மூலம் 220 கோடி ரூபாய் வசூலாகியதாகவும், அதில், பாஜக கட்சிக்கு 210 கோடி ரூபாய் வசூல் கிடைத்துள்ளதால், 95% நிதி பாஜகவுக்கு மட்டுமே எப்படி கிடைத்தது என்றும், இதில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் இது குறித்த விளக்கம் அளிக்க உச்சநீதிமன்ற வழங்கிய நோட்டீஸை தொடர்ந்து தேர்தல் ஆணையமும் பாஜகவுக்கு 211 கோடி வசூல் ஆனது உறுதியாகியுள்ளது.
இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கவுள்ளது என்பதை அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.