ஓட்டுப் போடப் போகும் மகா ஜனங்களே உஷார்- செல்போன் கொண்டு போகாதீர்

Loksabha election, mobile phone not allowed in polling stations,tn CEC Satya Prada sahoo announced:

by Nagaraj, Apr 15, 2019, 14:50 PM IST

ஓட்டுச்சாவடிக்கு செல்லும் வாக்காளர்கள் மொபைல் போன் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும் வாக்குச்சாவடியை சுற்றியுள்ள 100 மீட்டர் தொலைவுக்குள் செல்போன் பயன்படுத்தவும் கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில்மக்களவை பொதுத் தேர்தல், மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ஒரே கட்டமாக வரும் 18-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து வரும் தேர்தல் ஆணையம் , தற்போது மொபைல் போனுக்கும் தடை விதித்துள்ளது. ஓட்டுச்சாவடிக்குள் மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் ஓட்டுச்சாவடி அமைந்துள்ள 100 மீட்டர் சுற்றளவுக்குள் செல்போன் பயன்படுத்தவும் அனுமதி இல்லை என்றும் அறிவித்துள்ளார்.

இதனால் ஓட்டுப் போடச் செல்லும் மகா ஜனங்கள் மறந்தும் செல்போனை கொண்டு சென்று விடாதீர்கள். வீட்டில் பத்திரப்படுத்தி விட்டோ, அல்லது வாகனங்களில் சென்றால் பத்திரமாக வைத்து விட்டுச் செல்வதே உத்தமம்.

You'r reading ஓட்டுப் போடப் போகும் மகா ஜனங்களே உஷார்- செல்போன் கொண்டு போகாதீர் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை