பேசாதீங்க...! யோகிக்கு 72 மணி நேரம், மாயாவதிக்கு 48 மணி நேரம் தடை விதித்தது தேர்தல் ஆணையம்!

Advertisement

யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு பிரசாரம் செய்ய தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.

17வது மக்களைவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான ஆயுத்த பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், ஜாதி மற்றும் மதத்தை காரணம் காட்டி தேர்தல் பிரசாரம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

முன்னதாக, மீரட்டில் நடந்த பிரசார பொதுக்கூட்டதில் கலந்து கொண்ட உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் எழுந்தது. கடந்த 7-ம் தேதி சகரன்பூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய மாயாவதி, உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்றால், இஸ்லாமியர்களின் வாக்குகள் சிதறாமல் தங்களது கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனப் பேசினார். இதனையடுத்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறியது உறுதி செய்யபட்டதால், அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், ஜாதி, மதம் ஆகியவற்றை தேர்தல் பிரசாரம் செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் அஜாரான வழக்கறிஞர், தேர்தல் விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க மட்டுமே அதிகாரம் இருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து, தங்களுக்கு அதிகாரம் இல்லை என தேர்தல் ஆணையம் கூறுகிறது, தேர்தல் நடத்தை விதிகள் மீறுவோர் மீது என்ன நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது என கேள்வி எழுப்பிய நிதிபதிகள் வாழ்க்கை ஒத்திவைத்தனர்.

இப்படியான, நிலையில் சாதி, மதம் தொடர்பான சர்ச்சைக் குறிய கருத்துகளை பிரசாரத்தில் பேசியதற்காக, ஆதித்யநாத்துக்கு நாளை காலை முதல் அடுத்த 72 மணி நேரத்திற்கு பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதே போல், மாயாவதிக்கும் அதே காரணத்திற்காக நாளை காலை முதல் அடுத்த 48 மணிநேரத்திற்கு பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
/body>