கன்னியாகுமரியைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் நோட்டாவிற்குத் தான் தங்கள் ஓட்டு என முடிவு செய்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் இதுவரை நடிகர் விஜய் எந்தவித வாய்ஸும் சப்போர்ட்டும் எந்தவொரு கட்சிக்கும் வழங்கவில்லை. சென்னை இவிபி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட செட்டில் படு பிசியாக தளபதி 63 பட ஷூட்டிங்கில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியை சேர்ந்த கன்னியாகுமரி மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவர் ஜோஸ் பிரபு, கன்னியாகுமரியை பொறுத்தவரையில் எந்தவொரு கட்சிக்கும் தங்களது ஆதரவு இல்லை என்றும் வரும் மக்களவைத் தேர்தலில் நோட்டாவுக்குத் தான் எங்கள் அனைவரின் ஓட்டும் என பரபரப்பாக பேட்டியளித்துள்ளார்.
இதற்கு காரணம், கடந்த சில நாட்களுக்கு முன்னர், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் செயலாளர் ஜபின் தலைமையில், காங்கிரஸ் வேட்பாளர் வசந்த் அண்ட் கோ வசந்தகுமாருக்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விஜய் காதுக்கு தகவல் தெரிந்ததும், தலைவர் ஜோஸ் பிரபு மூலம் இப்படி ஒரு பேட்டி கிடைத்துள்ளது. மேலும், காசு வாங்கிக் கொண்டு கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதனால், கன்னியாகுமரியில் மட்டும் சுமார் ஒரு லட்சம் விஜய் ரசிகர்கள் ஓட்டு நோட்டாவிற்கு விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.