ஓட்டுப் போடல..! ரூ1000 திருப்பிக் கொடு..! ஓபிஎஸ் மகன் தரப்பு கறார் வசூலா..? தேனியில் சுழன்றடிக்கும் சர்ச்சை

Loksabha election, tension in theni over ops supporters giving pressure to voters

by Nagaraj, Apr 22, 2019, 09:45 AM IST

துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் போட்டியிட்ட தேனி மக்களவைத் தொகுதியில் ஓட்டுக்கு ரூ.1000 என தாராளமாக பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறப்பட்டது. பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடாதவர்களிடம், கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டு ஓ பிஎஸ் மகன் தரப்பில் கறார் வசூல் செய்யப்படுவதாக தேனி தொகுதிக்குட்ப பட்ட உசிலம்பட்டி பகுதியில் சர்ச்சை றெக்கை கட்டிப்பறக்கிறது.

தேனி மக்களவைத் தொகுதியில் தனது மகனுக்கு ரொம்ப ஈஸியாக சீட் வாங்கி விட்ட ஓபிஎஸ், அங்கு கடும் சவால் காத்திருந்தது. ஆரம்பம் முதலே தேனி மாவட்ட அதிமுகவில் ஓபிஎஸ்சின் பரம வைரியாக வலம் வந்த தங்க.தமிழ்ச்செல்வன் இங்கு அமமுக சார்பில் களத்தில் குதித்ததே இதற்குக் காரணம்.

2001-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, டான்சி வழக்கில் தண்டனை பெற்றதால் ஜெயலலிதா போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.பின்னர் தண்டனையிலிருந்து விடுபட்ட ஜெயலலிதாவுக்காக ஆண்டிபட்டி தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த தங்க .தமிழ்ச்செல்வன், ஜெயலலிதா போட்டியிடுவதற்காக தமது பதவியை தியாகம் செய்து அவருடைய செல்லப் பிள்ளையாக வலம் வந்தவர்.

இதன் பின் தங்க .தமிழ்ச்செல்வனுக்கு ஒரே ஏறுமுகம் தான். அதே ஆண்டு தங்க .தமிழ்ச்செல்வனை ராஜ்யசபா எம்பியாக்கியதுடன் மாவட்டச் செயலாளராக்கியும் அழகு பார்த்தார் ஜெயலலிதா .பின்னர் 2011, 2016 தேர்தல்களில் ஆண்டிபட்டி எம்எல்ஏவாகவும் ஆன தங்க .தமிழ்ச்செல்வனுக்கும் ஓபிஎஸ்சுக்கும் எப்போதுமே முட்டல் மோதல் தான்.

ஜெயலலிதா மறைந்த பின்னரும் இதே நிலைதான் நீடித்தது. ஓ பிஎஸ்சை முதல்வர் பதவியிலிருந்து துரத்த, சசிகலா, தினகரன் தரப்பின் செல்லப் பிள்ளையாக வலம் வந்தார் தங்க .தமிழ்ச்செல்வன். ஓபிஎஸ், இபிஎஸ் தரப் பால் ஆண்டிபட்டி எம்எல்ஏ பதவியை காவு கொடுத்தாலும், அமமுகவில் தினகரனுக்கு அடுத்த முக்கிய தலைவராக உருவெடுத்து விட்டார் தங்க .தமிழ்ச்செல்வன்.

இதனால் தேனி மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள பிரமலைக்கள்ளர் சமுதாயச் சேர்ந்தவரான தங்க .தமிழ்ச்செல்வனை, ஓபிஎஸ்சின் மகனுக்கு எதிராக மல்லுக்கட்ட அதிரடியாக களம் இறக்கி விட்டுவிட்டார் தினகரன்.

இதனால் சமுதாய ரீதியிலான மோதலாகி விட்டது தேனி தேர்தல் களம். இதில் திமுக கூட்டணியில் காங்கிரசின் மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவனும் ஒரு பக்கம் மல்லுக்கு வர தேனி களம் ஆரம்பம் முதலே சூடாகிவிட்டது. ஓபிஎஸ் தரப்புக்கோ வெற்றி பெற்றால் மட்டுமே அரசியல் பயணத்தை தொடர முடியும் என்ற கவுரவ பிரச்னை. பிரதமர் மோடியையே தேனிக்கு அழைத்து வந்து தனது மகனுக்காக பிரசாரம் செய்ய வைத்தார் ஓபி எஸ்.

ஆனாலும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் சாதகமாக இல்லை என்று தெரிய வந்து, கடைசியாக பணப்பட்டுவாடா ஆயுதத்தை கையில் எடுத்தனர். ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் என தொகுதிக்குள் பணம் வாரியிறைக்கப்பட்டது. அதிலும் இடைத் தேர்தல் நடைபெற்ற ஆண்டிபட்டி, பெரியகுளத்தில் ரூ 2000 என பண மழை பொழிந்தது. ஓட்டுக்கு துட்டு கொடுத்ததால் வெற்றி நிச்சயம் என்று நம்பிக் கொண்டிருந்த ஓ பிஎஸ் தரப்புக்கோ, ஓட்டுப்பதிவுக்கு பின் வந்த தகவல்கள் பேரதிர்ச்சியை கொடுத்து விட்டதாம்.

கட்சியினர் பணப் பட்டுவாடாவை ஒழுக்கமாகச் செய்யாமல் ஏகப்பட்ட பணத்தை அபேஸ் செய்ததும், பணம் வரங்கிய பலரும் ரெட்டை இலைக்கு ஓட்டுப் போடாமல், பரிசுப் பெட்டகத்தில் முத்திரை குத்தி விட்டனர் என்ற தகவலால் ஓபிஎஸ் தரப்பு ஆட்டம் கண்டு கொதித்துள்ளதாம். அதிலும் உசிலம்பட்டி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தான் ஏராளமான அதிமுகவினரே,சொந்த பாசத்தில் தாராளமாக தங்க. தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக வாக்களித்த தகவல் கிடைக்க, சம்பந்தப்பட்டவர்களுக்கு ஓபிஎஸ் தரப்பில் வித்தியாசமான நெருக்கடி கொடுக்கப்படுகிறதாம். அதுதான் ஓட்டுப் போடலைல..கொடுத்த ஆயிரம் ரூபாயை திருப்பிக் கொடு என்பது போல அதிமுகவினரிடமே மிரட்டல் விட, இந்த விவகாரம் இப்போது அம்பலத்துக்கு வந்து சந்தி சிரிக்கிறது. சிலர் இதை பகிரங்கமாகவே மீடியாக்களிடமும் போட்டுடைக்க, ஓபிஎஸ் தரப்புக்கோ அடிமேல் அடியாக ஆட்டம் கொடுத்துள்ளது.

இது போதாதென்று மீடியாக்களில் விளம்பரம் என்ற பெயரில், ஓபிஎஸ் மகனுக்கு ஆதரவான செய்தி வெளியிட பெரும் தொகை பேரம் பேசப்பட்டு, முன்பணம் மட்டுமே கொடுக்கப்பட்டதாம். மீதிப் பணத்தை கேட்டால், ஏதேதோ காரணம் சொல்லி தட்டிக் கழிக்க அதுவும் பஞ்சாயத்துக்கு உள்ளாகியுள்ளதாம். இதனால் ஓபிஎஸ் தரப்புக்கு இன்னும் என்னென்ன மாதிரி நெருக்கடிகள் வரப்போகிறதோ என்று அமமுக தரப்பில் புன்னகைக்கின்றனராம்.

ஓட்டுக்கு ரூ.1000 ..! அடுத்த ரவுண்டும் உண்டாம்...! தேனியில் தூள் பறக்குது....! கரை சேர்வாரா ஓபிஎஸ் மகன்

You'r reading ஓட்டுப் போடல..! ரூ1000 திருப்பிக் கொடு..! ஓபிஎஸ் மகன் தரப்பு கறார் வசூலா..? தேனியில் சுழன்றடிக்கும் சர்ச்சை Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை