38 மக்களவைத் தேர்தல் - இறுதி வாக்கு சதவீதம் .! தர்மபுரி டாப் - தென் சென்னை ரொம்ப குறைவு

Loksabha election, EC releases final polling percentage in 38 constituencies in tn

Apr 19, 2019, 15:20 PM IST

தமிழகத்தில் நேற்று நடந்த 38 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எவ்வளவு என்பது குறித்த இறுதிப் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட தருமபுரி தொகுதியில் அதிகபட்சமாக 80.49% வாக்குகள் பதிவாகி லிஸ்டில் முதலிடம் பிடித்துள்ளது. மிகக் குறைவாக தென் சென்னை தொகுதியில் 56.41% சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

38 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் பற்றிய இறுதி நிலவரத்தை இன்று தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி தருமபுரி புரியில் 80.49% பதிவாகி முதலிடம் பிடித்துள்ளது. அடுத்து அதிக பட்சமாக நாமக்கல்லில் 79.98%, ஆரணி 7 8.80%, கள்ளக்குறிச்சி 78.38 விழுப்புரம் 78.22, சிதம்பரம் 77.72% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக வாக்குப் பதிவு நடைபெற்றுள்ள இந்தத் தொகுதிகள் எதிலுமே திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே நேரடி மோதல் இல்லை என்றாலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகளும், நாமக்கல்லில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியும இரட்டை இலை யுடன் பலப்பரீட்சை நடத்துகின்றன.

துணை முதல்வர் ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத் போட்டியிடும் தேனியில் 74.75 %, முதல்வர் இபிஎஸ்சின் மாவட்டமான சேலத்தில் 77.33% வாக்குகளும் பதிவாகி உள்ளன. சித்திரைத் திருவிழா வால் வாக்குப்பதிவு நேரம் அதிகரிக்கப்பட்ட மதுரையில் 65.83%, கோவையில் 63.99% வாக்குகள் பதிவாகியுள்ளன.

கனிமொழி போட்டியிட்ட தூத்துக்குடியில் 69.03%, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்ட கன்னியாகுமரியில் 69.02% வாக்குகளும் பதிவாகி உள்ளன.

ஓட்டுக்கு ரூ.1000 ..! அடுத்த ரவுண்டும் உண்டாம்...! தேனியில் தூள் பறக்குது....! கரை சேர்வாரா ஓபிஎஸ் மகன்

You'r reading 38 மக்களவைத் தேர்தல் - இறுதி வாக்கு சதவீதம் .! தர்மபுரி டாப் - தென் சென்னை ரொம்ப குறைவு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை