ஒரே கட்சிக்கு...ஒரே மாதிரியாக வாக்களிக்கும் தமிழக மக்கள்..! இந்தியாவிலேயே இங்குதான் அதிகம்!

பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் 94 சதவீத பேர், ஒரு கட்சிக்கோ கூட்டணிக்கோ ஆதரவாக வாக்களிக்கின்றனர் என்று பிரபல பத்திரிக்கையாளர் பிரணாய் ராய் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரபல பத்திரிக்கையாளர் பிரணாய் ராய். பன்முக தன்மை கொண்ட இவர், தேர்தல் முடிவுகளை கணிப்பதில் கில்லாடி. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளரான என்.ராம், சீனிவாசன் ரமணி இருவரும் இணைந்து பிரணாய் ராயுடன் நடத்திய, ‘தி வெர்டிக்ட்: டிகோடிங் இண்டியா’ஸ் எலெக்‌ஷன்ஸ்’ புத்தகம் தொடர்பான நேர்காணலின் தொகுப்பு ‘’இந்து தமிழ் திசையில்’’ வெளியாகி உள்ளது. அதில்,

‘’மக்களவைக்கும் மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் சேர்ந்து நடக்கும் தேசியத் தேர்தல் இப்போது நடைமுறையில் இல்லை; 1950-களில் தொடங்கியபோது அரசியல்வாதிகளையும் தலைவர்களையும் மக்கள் முழுதாக நம்பினார்கள். மக்களவைப் பொதுத் தேர்தல் என்பது மாநிலத் தேர்தல்களின் கூட்டாட்சிக்கான தேர்தலாகவே இருந்தது. இப்போது மக்களவைப் பொதுத் தேர்தலிலேயே ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொருவிதமாக வாக்களிக்கின்றன. தமிழ்நாட்டில் பெருவாரியான மக்கள் ஒரு கட்சிக்கும், மகாராஷ்டிரத்தில் பெருவாரியான மக்கள் இன்னொரு கட்சிக்கும் வாக்களிக்கலாம். மக்களவைத் தேர்தல் முடிவுகளில் 77% மாநில அளவில் பெருவாரியான முடிவாகவே இருப்பதை நாங்கள் ஆய்வில் கண்டோம்’’ என்றவரிடம்,

ஒன்றுபோல மக்கள் வாக்களிப்பதற்குத் தமிழ்நாடு நல்ல உதாரணம் என்று சொல்லலாமா? என்ற கேள்விக்குப் பதில் அளித்துள்ள அவர், ‘’பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் 94 சதவீத பேர், ஒரு கட்சிக்கோ கூட்டணிக்கோ ஆதரவாக வாக்களிக்கின்றனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம். தொகுதியில் அதிக வாக்குகளைப் பெற்றவர் வெற்றியாளர் என்றால், சிறிய அளவில் வாக்கு சதவீதம் பெற்ற ஒரு கட்சிக்கு ஆதரவாக அவர் திரும்பும் பட்சத்தில், தொகுதியும் அவரது கட்சியும் கூட்டணி பக்கம் சாய்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

விரலில் ‘மை’ இருந்தால்.. ஓட்டலில் 50% தள்ளுபடி!

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்