ஸ்டாலின் பேச்சு, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு, வேளாண் சட்ட போராட்டம்.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து திமுக, காங்கிரஸ் கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுக்களை தாக்கல் செய்துள்ளன. இவை வரும் 11ம் தேதி விசாரணைக்கு வருகின்றன.
மதுரை கே.கே.நகர் ரவுண்டானாவில் ஜெயலலிதா சிலையை திறப்பதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திறக்க அனுமதித்தால், நீதிமன்றத்திற்கு செல்லவிருப்பதாக அக்கட்சி எம்.எல்.ஏ. சரவணன் தெரிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் திமுக புதிய மனுவை தாக்கல் செய்திருக்கிறது. இது நாளை விசாரணைக்கு வருகிறது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது.
யாரையும் புகழ்ந்து பேசி அண்டி பிழைக்கும் நிலை உண்மையான பாஜக தொண்டனுக்கு இல்லை என்று ஸ்டாலினை புகழ்ந்த பி.டி.அரசகுமாரை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது
டி.டி.வி.தினகரனும் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரும் அதிமுகவை பாடாய்படுத்தினார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா அணை கட்டும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு தாக்கல் செய்ய வேண்டுமென்று திமுக வலியுறுத்தியுள்ளது.
கோவையில் அதிமுக கொடிக்கம்பம் சரிந்து விழுந்ததில், வாகன விபத்துக்குள்ளான பெண் காயமடைந்தார். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் குறித்தும், அதற்கு துணை போகும் பாஜக அரசு குறித்தும் தமிழகம் முழுவதும் திண்ணைப் பிரச்சாரம் மற்றும் கூட்டங்கள் நடத்திட திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.