மதுரையில் ஜெ.சிலை திறக்க திமுக எதிர்ப்பு.. வழக்கு தொடர முடிவு

Advertisement

மதுரை கே.கே.நகர் ரவுண்டானாவில் ஜெயலலிதா சிலையை திறப்பதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திறக்க அனுமதித்தால், நீதிமன்றத்திற்கு செல்லவிருப்பதாக அக்கட்சி எம்.எல்.ஏ. சரவணன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் மாவட்ட நீதிமன்றத்திற்கு அருகே கே.கே.நகர் ரவுண்டானாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலை நிறுவப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் சிலையைச் சுற்றி பெரிய தடுப்புகளை அமைத்து எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகே ஜெயலலிதா சிலை நிறுவும் பணி நடந்தது. இதனால், வெளியே யாருக்கும் தெரியவில்லை. தற்போது ஜெ. சிலை திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில், சிலையைத் திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி தரக் கூடாது என்று திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்காக மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

மதுரை கே.கே.நகரில் மாவட்ட நீதிமன்றம், பெரியார் நுழைவுவாயில் அருகில் ஜெயலலிதாவின் சிலை அதிமுகவினரால் நிறுவப்பட உள்ளதாக தெரிகிறது. அங்கு ஏற்கனவே எம்.ஜி.ஆர். சிலை இருக்கிறது. அந்தப் பகுதி போக்குவரத்து அதிகமாக காணப்படும் இடம். எம்.ஜி.ஆர். பிறந்த நாளன்று அங்கு ஆளும்கட்சியினர் திரள்வதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.

மேலும், மாவட்ட நீதிமன்றம், மாட்டுத்தாவணி பஸ்நிலையம், சிட்கோ உள்பட மக்கள் கூடும் இடங்கள் அருகே உள்ளதால், பல பாதிப்புகள் ஏற்படும். மதுரை-திருச்சி செல்லும் வாகனங்களும் பெரியார் நுழைவு வாயில் வழியாகவே செல்ல வேண்டியுள்ளது.
எனவே அங்கு ஜெயலலிதாவின் சிலையை அமைத்தால் அவரின் பிறந்தநாள், நினைவு நாள் நிகழ்ச்சிகளை அதிமுகவினர் அங்கு நடத்துவர். இதனால், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும். இந்த சிலை அமைந்தால் வாகன விபத்து அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், இந்தியா முழுவதும் பொது இடங்களில் சிலை அமைப்பதற்கு தடைவிதித்து உச்ச நீதிமன்றம் கடந்த 2013 ஜனவரியில் உத்தரவிட்டிருக்கிறது. அதனால், ஜெயலலிதாவின் சிலையை திறக்க அனுமதிக்கக் கூடாது.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மதுரை மாநகர் திமுக பொறுப்புக்குழு தலைவர் கோ.தளபதி, திமுக புறநகர் மாவட்டச் செயலாளர்கள் பி.மூர்த்தி எம்.எல்.ஏ., எம்.மணிமாறன், முன்னாள் மேயர் பெ.குழந்தைவேலு, முன்னாள் எம்.எல்.ஏ. வி.வேலுச்சாமி, சரவணன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இந்த மனுவை கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோரிடம் அளித்துள்ளனர்.
இது குறித்து, சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கூறுகையில், நீதிமன்றத் தடை இருந்தும் ஜெயலலிதா சிலையைத் திறக்க அனுமதித்தால், அதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்வோம் என்றார்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>