பிரக்யா சிங்கை ஒருபோதும் மன்னிக்கவே மாட்டேன்! வாய் திறந்த பிரதமர் மோடி!!

Will never forgive Pragya Thakur for her remarks on Bapu, says PM Modi

by எஸ். எம். கணபதி, May 17, 2019, 15:53 PM IST

‘‘கோட்சேவை புகழ்ந்த பா.ஜ.க. வேட்பாளர் பிரக்யா சிங்கை ஒரு போதும் மன்னிக்கவே மாட்டேன்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலில் 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்து, மே 19ம் தேதி இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்கள் மேனகா காந்தி, பிரக்யா சிங் தாக்குர் உள்பட பலரும் தங்கள் பிரச்சாரத்தின் போது ஏடாகூடமாக பேசி, தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வருகின்றனர்.

மத்தியபிரதேச மாநிலம், போபால் பா.ஜ.க. வேட்பாளரான பிரக்யா சிங் ஏற்கனவே பல முறை சர்ச்சையில் சிக்கியவர். அவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பேசுகையில், மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று புகழ்ந்தார். இது நாடு முழுவதும் பலத்த கண்டனக் குரல்களை ஒலிக்கச் செய்தது. எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து, பிரக்யா சிங் பேசியது அவரது சொந்த கருத்து, அது கட்சிக்கு தொடர்பில்லை என்று பா.ஜ.க. மறுத்தது.

 ஆனாலும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ‘‘பிரக்யா சிங் கருத்தை அவரது கருத்து சொல்லி, மழுப்புவது போதாது. அந்த கருத்தில் உங்கள் நிலை என்ன என்பதை சொல்வதற்கு பா.ஜ.க. தேசிய தலைவர்களுக்கு துணிவு உள்ளதா?’’ என்று ட்விட் போட்டார். காரணம், பிரதமர் மோடி உள்பட பா.ஜ.க. தலைவர்கள், கோட்சே நினைவு தினங்களை அனுசரிப்பவர்கள்தான். அதனால், அவர்கள் கோட்சேவுக்கு எதிராக பேசுவார்களா என்று எதிர்பார்ப்புடன் பிரியங்கா காந்தி அப்படி ட்விட் போட்டார்.

இந்த சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நியூஸ்24 என்ற தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இந்த விவகாரத்துக்கு பதில் கொடுத்து விட்டார். அவர் கூறுகையில், ‘‘பிரக்யா சிங் மன்னிப்பு கேட்டு விட்டார். அது வேறு விஷயம். ஆனால், எனது உள்ளத்தில் அவரை ஒரு போதும் நான் மன்னிக்கவே மாட்டேன்’’ என்றார். காந்தி மற்றும் கோட்சே பற்றி என்னென்ன பேசப்பட்டதோ அவை மிகவும் தவறானவை. அது வெறுக்கத்தக்க கருத்து. இப்படி பேசுபவர்கள் வருங்காலத்தில் நூறு முறை சிந்திக்க வேண்டும்& என்று விளக்கம் தெரிவித்திருக்கிறார்.

You'r reading பிரக்யா சிங்கை ஒருபோதும் மன்னிக்கவே மாட்டேன்! வாய் திறந்த பிரதமர் மோடி!! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை