அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு உள்துறை அமைச்சர் அமித்ஷா!

portfolios allocated to cabinet ministers

by எஸ். எம். கணபதி, May 31, 2019, 13:48 PM IST

மத்திய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமருக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு பணியாளர், பொது, மக்கள் குறைகள், அணுசக்தி, விண்வெளி, அரசு கொள்கைகள் மற்றும் இதர அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத அத்தனை துறைகளும் ஒதுக்கப்படுகிறது.

அமித்ஷா உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜ்நாத் சிங் பாதுகாப்பு துறை அமைச்சராகவும், நிர்மலா சீத்தாராமன் நிதியமைச்சராகவும், வர்த்தகத் துறை அமைச்சராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர்களைத் தவிர நிதின்கட்கரி, சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சராகிறார். சதானந்த கவுடா, ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராகிறார்.

ராம்விலாஸ் பஸ்வான், நுகர்வோர் மற்றும் உணவு, பொது விநியோகத் துறை அமைச்சர்.
நரேந்திரசி்ங் தோமர், விவசாயத் துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் துராஜ் அமைச்சர்.

ரவிசங்கர் பிரசாத் மீண்டும் சட்டம் மற்றும் நீதித்துறை, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்.

ஹர்சிம்ரத் கவுர் பாதல், உணவு பதனிடும் துறை அமைச்சர்
தாவர்சந்த் கெலாட், சமூக நீதி மற்றும் உரிமையளிப்பு து.றை அமைச்சர்.
முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர், வெளியுறவுத் துறை அமைச்சர்.

ரமேஷ் பொக்ரியால், மனித வளர்ச்சி மேம்பாட்டு துறை அமைச்சர். அர்ஜூன் முண்டா பழங்குடியினர் நலத் துறை அமைச்சர்.

ஸ்மிருதி இரானி, பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர்.
ஹர்ஷவர்த்தன், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, அறிவியல் மற்றும் தொழி்ல்நுட்பம் மற்றும் பூமி அறிவியல் துறை அமைச்சர்.

பிரகாஷ் ஜவடேகர், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவகால மாறுபாடு, தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர்.

பியூஸ் கோயல், ரயி்ல்வே மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை
தர்மேந்திர பிரதான், பெட்ரோலியத் துறை மற்றும் ஸ்டீல் துறை அமைச்சர்.
முக்தார் அப்பாஸ் நக்வி, சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர்.
பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்ற விவகாரத் துறை, நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர்.

மகேந்திரநாத் பாண்டே, திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர்.
அரவிந்த கண்பத் சாவந்த், கனரக தொழில் துறை மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் துறை அமைச்சர்.

கிரிராஜ் சிங், கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன்வளத் துறை அமைச்சர்.
கஜேந்திரசிங் ஷெகாவத், நீர்வள மேம்பாட்டு துறை அமைச்சர்.

இவ்வாறு கேபினட் அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது.

You'r reading அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு உள்துறை அமைச்சர் அமித்ஷா! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை