குடம் இங்கே... தண்ணீர் எங்கே? ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் கோஷம்

by Nagaraj, Jun 24, 2019, 11:17 AM IST
Share Tweet Whatsapp

குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காலிக்குடங்களுடன் பங்கேற்ற ஏராளமானோர், குடம் இங்கே... தண்ணீர் எங்கே? என்று முழக்கமிட்டனர்.

தண்ணீர் தட்டுப்பாட்டால் தமிழகம் தவியாய் தகிக்கிறது. மழை கை விட்டதால் . குடிநீருக்கே அல்லாட வேண்டியுள்ளது. சென்னையிலோ, தண்ணீர் தட்டுப்பாடு உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. குடம் தண்ணீருக்காக மக்கள் காலிக்குடங்களுடன் தெருக்களில் அலைகின்ற அவலம் ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி திமுக கடந்த 22-ந் தேதி தண்ணீர் பிரச்சனைக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான திமுகவினர் காலிக்குடங்களுடன் பங்கேற்றனர்.

மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் காலிக்குடங்களை கையிலேந்தியபடி குடம் இங்கே... தண்ணீர் எங்கே? என்று முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பேசிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் நீதி, நியாயம், சட்டம் ஒழுங்குக்கு பஞ்சம் ஏற்பட்டது போல் இப்போது சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தண்ணீருக்கும் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. இந்தப் பிரச்னையை தீர்க்க தமிழக அரசு சிறிதும் அக்கறை காட்டவில்லை என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

மழை வேண்டி அதிமுக சார்பில் யாக பூஜை.... அமைச்சர்கள் பயபக்தியுடன் பங்கேற்பு


Leave a reply