பீகாரில் மூளைக் காய்ச்சலுக்கு இறந்த குழந்தைகள் அனைவரும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வறுமையின் காரணமாகவே அவர்கள் உயிரிழக்க நேரி்ட்டது என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று அடுத்தடுத்து வெளியிட்ட ட்விட்களில் கூறியிருப்பதாவது:
நியாய் திட்டத்தின் அருமை(மாதம் ரூ.6000) இப்பொழுது பீகார் மக்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த குழந்தைகளின் மரணத்திற்கு முக்கிய காரணம் வறுமை, பட்டினி.
பாதிக்கப்பட்ட குழந்தைகள் காய்ச்சலுக்கு முந்திய இரவு பட்டினியோடு உறங்கினார்கள்.
இந்த குடும்பங்களின் மாத வருமானம் சராசரி ரூ.5,700 இவர்களில் 80% கூலித் தொழிலாளர்கள், குடிசை வீடு.
என்சிபாலிடிஸ்(மூளைக் காய்ச்சல்) நோயில் இறந்த குழந்தைகள் அனைவரும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.