தி.மு.க. கூட்டணியை உடைப்பதா? கராத்தேவுக்கு காங்கிரஸ் கல்தா!

AICC suspented karathe thiyagarajan from congress party

by எஸ். எம். கணபதி, Jun 27, 2019, 14:06 PM IST

தி.மு.க. கூட்டணியை உடைக்கும் வகையில் பேசிய கராத்தே தியாகராஜனுக்கு காங்கிரஸ் கல்தா கொடுத்துள்ளது.

கடந்த 21ம் தேதியன்று சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தலைமை தாங்கினார். அதில், தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் பேசும் போது, ‘‘இந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை பெற வேண்டும். இதில் நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது. கடந்த முறை சென்னை மாநகராட்சியில் வெறும் 14 வார்டுகள்தான் கொடுத்தார்கள். இந்த முறை அப்படி குறைவாக கொடுத்தால், தனித்து போட்டியிடலாம்.

என் மாவட்டத்தில் 35 வார்டுகள் உள்ளது. தனித்து போட்டியிட்டால், அங்குள்ள கட்சிக்காரர்களிடம் அட்ஜெஸ்ட் பண்ணியே நிறைய வார்டுகளில் வெற்றி பெறலாம்’’என்று பேசினார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ஆதரவாக பேசினர்.

‘‘நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு தேவையில்லாமல் பத்து தொகுதியை கொடுத்து விட்டோம், திமுக தனித்து போட்டியிட்டிருந்தாலே அதையும் வெற்றி பெற்றிருக்கலாம்’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் தி.மு.க.வினருக்கு கராத்தே பேச்சு எரிச்சல் ஊட்டியது. அப்போது சிங்கப்பூருக்கு சென்ற ஸ்டாலினுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தி.மு.க.வில் அதற்கு பதிலடி தர முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, திருச்சியில் தண்ணீர் தட்டுப்பாட்டுக்காக தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ‘‘உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும். தென்சென்னையில் 200 வார்டுகளில் 35 வார்டுகளை காங்கிரசுக்கு கொடுக்க வேண்டும் என்று ஒருவர் கூறியிருக்கிறார். காங்கிரசுக்கு அத்தனை சீட் கொடுத்துட்டு நாங்கள் குச்சி மிட்டாயை சப்பிக்கிட்டுப் போகவா? மக்களுக்கு நாம் நல்லது செய்ய வேண்டுமானால் தி.மு.க. தனித்துத்தான் போட்டியிட வேண்டும். காங்கிரஸுக்கு எத்தனை நாள் பல்லக்குத் தூக்குவது? தமிழகம் முழுவதுமில்லையென்றாலும் அட்லீஸ்ட் திருச்சியில் தனித்து போட்டியிட தலைவரிடம் வலியுறுத்துவேன்’’ என்றார்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு, தொலைக்காட்சிகளில் காங்கிரசை கழட்டி விட திமுக ஆயத்தமாகிறதா? என்று விவாதங்கள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், தி.மு.க.வை சமாதானப்படுத்தி கூட்டணியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸ் முயற்சித்துள்ளது. கராத்தே தியாகராஜனை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து அகில இந்திய காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
வழக்கமாக, மாவட்ட தலைவர்களை நீக்குவது தொடர்பாக, மாநில தலைவர் அல்லது மாநிலத்துக்கு பொறுப்பு வகிக்கும் மேலிடப் பிரதிநிதியே அறிவிப்பு வெளியிடுவார்கள். அந்த அறிவிப்பை அந்த மாவட்டத் தலைவர் சட்டைசெய்வதில்லை.

ஆனால், இந்த முறை கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபாலே அறிக்கை வெளியிட்டிருப்பதன் மூலம் அகில இந்திய காங்கிரஸ் எந்த அளவுக்கு தி.மு.க.வுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை காட்டுகிறது.

காங்கிரசை விமர்சித்தது ஏன்? கே.என்.நேரு திடீர் விளக்கம்

You'r reading தி.மு.க. கூட்டணியை உடைப்பதா? கராத்தேவுக்கு காங்கிரஸ் கல்தா! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை