ராஜ்யசபா தேர்தலில் வைகோ போட்டி

Vaiko will contest Rajyasabha election : mdmk

by எஸ். எம். கணபதி, Jul 2, 2019, 12:43 PM IST

தமிழகத்தில் 6 ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவிக்காலம் வரும் 24ம் தேதி முடிவடைகிறது. இந்த 6 காலியிடங்களுக்கு வரும் 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் அ.தி.மு.க. சார்பில் 3 எம்.பி.க்களையும், தி.மு.க. சார்பில் 3 எம்.பி.க்களையும் போட்டியின்றி தேர்வு செய்யலாம். நான்காவது வேட்பாளரை நிறுத்தினால் மட்டுமே தேர்தல் நடைபெறும். ஆனால், இரு கட்சிகளுமே போட்டியின்றி தலா 3 பேரை தேர்வு செய்து கொள்வது வழக்கம்.

அ.தி.மு.க. சார்பில் பா.ம.க.வுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது. அதில் லோக்சபா தேர்தலில் தோற்ற அன்புமணிக்கு அக்கட்சி வாய்ப்பு தரும் என தெரிகிறது. தி.மு.க.வில் ஏற்கனவே லோக்சபா தேர்தலில் போட்ட ஒப்பந்தப்படி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு 1 இடம் தருவதாக அறிவிக்கப்பட்டது. .

ம.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் யார்? என்பதை முடிவு செய்ய, அக்கட்சியின் உயர் மட்டக் குழு கூட்டம், அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் வைகோ தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ம.தி.மு.க. வேட்பாளராக பொதுச்செயலாளரே வைகோ போட்டியிட முடிவுசெய்யப்பட்டது.

ராஜ்யசபா தேர்தல்; திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு... சண்முகம், வில்சன் ஆகியோருக்கு அதிர்ஷ்டம்

You'r reading ராஜ்யசபா தேர்தலில் வைகோ போட்டி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை