கேக் சைஸ் பெரியதாக இருந்தால்தான் நல்லது: மோடி சொன்ன கருத்து

PM Modi in Varanasi Live- Size of the cake matters: PM on $5 trillion economy goal

by எஸ். எம். கணபதி, Jul 6, 2019, 14:09 PM IST

இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாற வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். இதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார்.

பிரதமர் மோடி 2வது முறையாக உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2வது முறை ஆட்சியமைத்தப் பின்பு அவர் வாராணாசி தொகுதிக்கு அடிக்கடி செல்லத் தொடங்கி விட்டார். இன்று(ஜூலை6) அவர் வாரணாசிக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அவரை வாரணாசி விமான நிலையத்தில் அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

வாரணாசி விமான நிலையத்தில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்ேபாது அவரை காங்கிரஸ் மூத்த தலைவரான அனில் சாஸ்திரியும், அவரது சகோதரர் சுனில் சாஸ்திரியும் சந்தித்து பேசினர்.

இதன்பின்பு, வாரணாசியில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடங்கி வைத்து மோடி பேசினார். இதைத் தொடர்ந்து, பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கைத் திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆகஸ்ட் 11ம் தேதி வரை உறுப்பினர் சேர்க்கை நடைபெற உள்ளது. உறுப்பினர் சேர்க்கைக்கு தனி ஹெல்ப்லைன் கொடுக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும் போது, ‘‘பட்ஜெட்டில் இந்தியா 5 டிரில்லியன் டாலர்(ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி) பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம். எதற்காக 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் வேண்டுமென்பதை பா.ஜ.க.வினர் புரிந்து கொண்டு மக்களுக்கும் விளக்க வேண்டும். ஆங்கிலத்தில், ‘சைஸ் ஆப் தி கேக் மேட்டர்ஸ்’ என்று சொல்லுவார்கள். அதைப் போல, பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறினால், அதிகமானோருக்கு பலன் கிடைக்கும். அதனால்தான், அதற்கு இலக்கு வைத்து செயல்படுகிறோம்’’ என்றார்.

30 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான தேர்தல்; 64 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கண்டனம்

You'r reading கேக் சைஸ் பெரியதாக இருந்தால்தான் நல்லது: மோடி சொன்ன கருத்து Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை