முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கடத்தப் போவதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த திருச்சியைச் சேர்ந்த ஹோட்டல் தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பாஸ்ட் புட் ஹோட்டலில் வேலை பார்த்து வந்த அந்த நபர் வேலை பறிபோன மன அழுத்தத்தில் கடத்தல் மிரட்டல் விடுத்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருச்சி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று பிற்பகலில் அவசர தொலைபேசி எண் 100-க்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடத்தப் போவதாகக் கூறிவிட்டு உடனடியாக இணைப்பைத் துண்டித்துள்ளார். இதையடுத்து அழைப்பு வந்த எண் மூலம் விசாரணை மேற்கொண்ட திருச்சி போலீசார், தொலைபேசியில் பேசிய நபர் திருச்சி தில்லை நகரைச் சேர்ந்த ரகமதுல்லா என கண்டுபிடித்தனர். தொடர்ந்து அவரைத் தேடிச் சென்று தில்லை நகர் போலீசார் கைது செய்தனர்.
தொலைபேசியில் மிரட்டல் விடுத்தது குறித்து ரகமதுல்லாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பாஸ்புட் கடை ஒன்றில் வேலை செய்து வந்த ரகமதுல்லா, வேலையிலிருந்து நிறுத்தப்பட்டதால் மன அழுத்தம் காரணமாக முதல்வர் பழனிச்சாமியை கடத்தப்போவதாக மிரட்டல் விடுத்ததாக தெரிவித்ததாக கூறியுள்ளார். இதனால் அவரிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவினில் முறைகேடுகளை தடுக்க முதல்வருக்கு முகவர்கள் வலியுறுத்தல்