காஷ்மீரில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் செய்யும் ஊழல்களைப் பார்த்து வெறுப்பு ஏற்பட்டு விட்டது. அதனால்தான், கோபத்தில் அப்படி பேசிவிட்டேன் என்று கவர்னர் சத்யபால் மாலிக் விளக்கம் கொடுத்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம், கார்கிலில் நேற்று நடந்த விழாவில் அம்மாநில கவர்னர் சத்யபால் மாலிக் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், ‘‘இங்கு துப்பாக்கியுடன் சுற்றும் இளைஞர்கள், எந்த காரணமும் இல்லாமல் சொந்த மக்களையே சுட்டுக் கொல்கிறார்கள். பாதுகாப்பு அதிகாரிகள், சிறப்பு போலீஸ் அதிகாரிகள் என்று ஏன் அவர்களையே சுட்டுக் கொல்கிறீர்கள்? மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்களை சுட்டுக் கொல்லுங்கள். காஷ்மீர் வளத்தை கொள்ளையடிப்பவர்களை என்றாவது சுட்டுக் கொன்றிருக்கிறீர்களா?’’ என்று கடுமையாக பேசினார்.
இந்நிலையில், இன்று அவர் ஏ.என்.ஐ. நிருபரிடம் கூறுகையில், ‘‘இந்த மாநிலத்தில் ஊழல் அதிகரித்து விட்டது. அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் செய்யும் ஊழல்களைப் பார்த்து எனக்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டது. அந்த கோபத்தில்தான் நான் அப்படி பேசி விட்டேன். ஒரு கவர்னராக நான் அப்படி பேசியிருக்கக் கூடாது. ஆனால், இப்போதும் எனது சொந்த கருத்து அதுதான்’’ என்று விளக்கம் அளித்தார்.
வீட்டு கரண்ட்பில் ரூ.128 கோடி..? உ.பி. கிராமவாசிக்கு 'ஷாக்' கொடுத்த மின் துறை