மக்கள் சொத்தை கொள்ளையடிக்கும் ஊழல்வாதிகளை சுட்டுக் கொல்லுங்கள் என்று காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் கார்கில்-லடாக் சுற்றுலாத் திருவிழா நேற்று நடைபெற்றது. கார்கிலில் நடந்த இவ்விழாவில் அம்மாநில கவர்னர் சத்யபால் மாலிக் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், ‘‘இங்கு துப்பாக்கியுடன் சுற்றும் இளைஞர்கள், எந்த காரணமும் இல்லாமல் சொந்த மக்களையே சுட்டுக் கொல்கிறார்கள். பாதுகாப்பு அதிகாரிகள், சிறப்பு போலீஸ் அதிகாரிகள் என்று ஏன் அவர்களையே சுட்டுக் கொல்கிறீர்கள்? மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்களை சுட்டுக் கொல்லுங்கள். காஷ்மீர் வளத்தை கொள்ளையடிப்பவர்களை என்றாவது சுட்டுக் கொன்றிருக்கிறீர்களா?
துப்பாக்கியால் எதையும் சாதிக்க முடியாது. துப்பாக்கியை வைத்து கொண்டு யாராலும் நாட்டை வளைத்து விட முடியாது. அரசாங்கத்தை மிரட்டி விட முடியாது. உலகிலேயே சக்திவாய்ந்த பயங்கரவாத அமைப்பாக செயல்பட்ட அமைப்பு, இலங்கையில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கம்தான். அந்த இயக்கத்திற்கே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. அதனால், எதையுமே பேச்சுவார்த்தையால் மட்டுமே தீர்க்க முடியும்’’ என்று பேசினார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் சஜ்ஜத் முப்்தியின் தனி பாதுகாப்பு அதிகாரி பரூக் அகமது ேரஷியை சில தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அதையொட்டித்தான், கவர்னர் சத்யபால் மாலிக் இப்படி பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றம் கலைப்பு: மு.க.ஸ்டாலின் கண்டனம்