பாஜக தலைவர்களுடன் வைகோ சந்திப்பு ஏன்? கூட்டணிகள் மாற்றமா?

After meeting prime minister modi, subramania swamy now vaiko meets senior bjp leader advani

by எஸ். எம். கணபதி, Jul 24, 2019, 13:47 PM IST

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, டெல்லியில் அடுத்தடுத்து பாஜக தலைவர்களை சந்தித்து பேசி வருவது பலருடைய புருவங்களையும் உயர்த்தியுள்ளது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகி உள்ளார். அவர் கடந்த திங்களன்று நாடாளுமன்றத்திற்கு சென்றார். அப்ேபாது நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அண்ணா சிலைக்கு அருகே சென்று கீழே விழுந்து வணங்கினார். அதன்பின், முரசொலி மாறன், காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரின் சிலைகளையும் வணங்கினார்.

இதன்பின், அவர் அந்த வளாகத்தில் தி்டீரென பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமியை சந்தித்தார். வைகோவை வசைபாடி சுப்பிரமணிய சுவாமி தனது ட்விட்டரில் 2 நாட்கள் முன்புதான் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், எதிரும், புதிருமாக உள்ள இருவரும் சந்தித்து கொண்டனர். எனினும், பரஸ்பரம் நலம் விசாரித்து வாழ்த்தும் தெரிவித்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை சந்தித்த வைகோ அவருக்கு சால்வை அணிவித்தார். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டனர். அந்த சந்திப்பு மகிழ்ச்சிகரமாக இருந்ததாகவும், பிரதமரிடம் முக்கியமான விஷயங்களை பேசியதாகவும் வைேகா குறிப்பிட்டார்.

இந்நிலையில், இன்று(ஜூலை 24) டெல்லியில் பாஜக மூத்த தலைவர் அத்வானி வீட்டிற்கு வைகோ தனது குடும்பத்தினருடன் சென்றார். அங்கு அத்வானியை சந்தித்து பேசினார்.
வைகோ டெல்லிக்கு சென்றதில் இருந்து வரிசையாக பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து வருகிறார். மேலும், பிரதமரிடம் பேசிய போது முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதித்ததாகவும், அதை இப்போது சொல்ல முடியாது என்றும் கூறியிருக்கிறார். எனவே, வேலூர் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியலில் ஏதேனும் அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என்ற பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது.

காரணம், வைகோவை கட்டாயப்படுத்தி எம்.பி.யாகச் சொல்லி வற்புறுத்தியதே திமுக தலைவர் ஸ்டாலின்தான். இதை வைகோ வெளிப்படையாக கூறியிருக்கிறார். திமுகவின் ஆதரவில்தான் அவர் ராஜ்யசபா எம்.பி.யாகி உள்ளார். எனவே, வைகோ வரிசையாக பாஜக தலைவர்களை சந்திப்பதை அத்துடன் பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது. அது மட்டுமல்ல. சமீப காலமாக திமுக விடுக்கும் கோரிக்கைகளுக்கு பாஜக செவிசாய்த்து வருவதாக தெரிகிறது.

தபால் துறை பணிக்கான தேர்வில் பிராந்திய மொழிகளில் எழுத தடை விதித்தது குறித்து, நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் முதலில் பேசியிருந்தாலும், திமுக எம்பி திருச்சி சிவா பேசிய போது அது கவனத்தை ஈர்த்தது. இதன்பிறகு, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அந்த தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார்.

எனவே, திமுகவுடன் இணக்கமாகச் செல்ல பாஜக விரும்புகிறதா? அடுத்து வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவை விட்டு விட்டு, திமுகவுடன் கூட்டணி சேர பாஜக விரும்புகிறதா? என்ற கேள்விகள், தமிழக அரசியலில் எழத் தொடங்கி விட்டன. ரஜினி கட்சி ஆரம்பித்து கூட்டணி அமைத்து பாஜகவுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருவார் என்றுதான் இத்தனை நாட்களாக பாஜக தலைமை எதிர்பார்த்திருந்தது. தற்போது ரஜினியை நம்ப முடியாமல், திமுகவுடன் ைககோர்த்தால் 25, 30 எம்.எல்.ஏக்களை பிடித்து விடலாம் என்று பாஜக கணக்கு போடுகிறதோ என்ற யூகமும் எழுகிறது.

எனவே, வைகோவின் பாஜக தலைவர்கள் மீதான திடீர் பாசத்திற்கு பின்னணியில் தமிழக அரசியல் மாற்றங்கள் ஏதேனும் நிகழுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளதை யாரும் மறுக்க முடியாது.

You'r reading பாஜக தலைவர்களுடன் வைகோ சந்திப்பு ஏன்? கூட்டணிகள் மாற்றமா? Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை