நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் மேயர் உமாமகேஸ்வரியின் வீட்டு பணிப்பெண் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நெல்லை மாநகராட்சியின் முதல் மேயராக ததவி வசித்த முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி கணவர் முருகசங்கரன் படுகொலை , வீட்டு வேலை பார்த்த பணிப் பெண் மாரியம்மாள் ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர். பட்டப் பகலில் நடந்துள்ள இந்த படுகொலை சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலைகளுக்கான காரணம் முன்விரோதமா? நகை, பணத்துக்காக நடந்த ஆதாயக் கொலையா? என்பதும் இன்னும் மர்மமாக உள்ளது. கொலையாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக சார்பில் மேயராக இருந்து, தற்போது நெல்லை மாவட்ட மகளிரணி அமைப்பாளராகவும் பொறுப்பு வகித்து வந்த உமாமகேஸ்வரி மற்றும் அவரது கணவர் முருகசங்கரன் ஆகியோர் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினார். ஆனால் கொலையுண்ட பணிப் பெண் மாரியம்மாள் உடலுக்கு அஞ்சலி செலுத்தவோ, அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறாமலோ மு.க.ஸ்டாலின் சென்று விட்டது பெரும் குறையாகக் கூறப்பட்டது.
37 வயதான மாரியம்மாள் கணவரை இழந்தவர். 9, 10, 11-ம் வகுப்புகளில் படிப்பும் 3 மகள்கள் இவருக்கு உள்ளனர். தான் கஷ்டப்பட்டு, தனது வருமானத்தில் இந்த 3 மகள்களையும் தனியார் பள்ளியில் மாரியம்மாள் படிக்க வைத்து வந்துள்ளார். தற்போது மாரியம்மாளும் படுகொலையான நிலையில், தாய், தந்தை இழந்து 3 மகள்களும் நிர்க்கதியான நிலைக்கு ஆளாகி விட்டனர். இவர்களுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை கூட சொல்லாமல் மு.க.ஸ்டாலின் கண்டு கொள்லாமல் சென்றது குறித்து விமர்சனங்களும் எழுந்து பரபரப்பானது.
இந்நிலையில் தற்போது மாரியம்மாள் படுகொலைக்கு அனுதாபம் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், திமுக சார்பில் மாரியம்மாள் குடும்பத்திற்கு ரூ .1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
பாலாற்றில் தடுப்பணை கட்ட தடை; எடப்பாடிக்கு ஸ்டாலின் கோரிக்கை