முத்தலாக் மசோதா அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடு - கனிமொழி கடும் விமர்சனம்

Muthalaq bill, Kanimozhi mp criticises admk walk out on Rajya sabha voting

by Nagaraj, Jul 30, 2019, 21:36 PM IST

மாநிலங்களவையில்த் முதலாக் தடை மசோதா மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல், புறக்கணிப்பு நாடகமாடி அதிமுக வெளிநடப்பு செய்து, மசோதா நிறைவேற மறைமுகமாக ஆதரவளித்தது வெட்கக்கேடானது என்று திமுக எம்.பி கனிமொழி விமர்சித்துள்ளார்.

முத்தலாக் தடை மசோதா, கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலங்களவையிலும் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா மீது மாநிலங்களவையில் இன்று முழுவதும் விவாதம் நடைபெற்றது.காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மசோதாவை நிறைவேற்றும் முன் நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் எனவும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

மக்களவையில் இந்த மசோதாவை அதிமுகவின் ஒரே ஒரு எம்.பி.யான ஓ.பி.ரவீந்திரநாத் குமார் பேசிய நிலையில், மாநிலங்களவையில் அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன் அதிமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்து விட்டனர்.

இதனால் முத்தலாக் தடை மசோதா மீதான வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 99 பேரும், எதிர்ப்பு தெரிவித்து 84 பேரும் வாக்களித்த நிலையில் முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. மாநிலங்களவையில் பாஜகவுக்கு போதிய பலம் இல்லாத நிலையில் அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் மட்டுமின்றி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பகுஜன் சமாஜ் கட்சி,, தெலுங்கு தேசம், உள்ளிட்ட கட்சிகளும் வெளிநடப்பு செய்த நிலையில் இந்த மசோதா எளிதாக நிறைவேறிவிட்டது. இனி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவரின் ஒப்புதலுக்கு பின் சட்டமாக்கப்படும்.

இந்நிலையில், மாநிலங்களவையில் வாக்கெடுப்பில் அதிமுக பங்கேற்காமல் வெளிநடப்பு செய்ததை கனிமொழி விமர்சித்துள்ளார். கனிமொழி தன்னுடைய ட்விட்டரில், ‘முத்தலாக் மசோதா வெற்றி பெறுவதற்கு வசதியாக ராஜ்ய சபாவில் அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது’ என அந்தப் பதிவில் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

You'r reading முத்தலாக் மசோதா அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடு - கனிமொழி கடும் விமர்சனம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை