இந்திய ஜனநாயகத்தில் இன்று கருப்பு தினம் மெகபூபா முப்தி கண்டனம்

by எஸ். எம். கணபதி, Aug 5, 2019, 22:25 PM IST

இந்திய ஜனநாயகத்தில் இன்று கருப்பு தினம் என்று பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு, மெகபூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று, “ஜனநாயக முறையில் ஜம்மு காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் இன்று வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருப்பது எவ்வளவு பெரிய முரணாக உள்ளது. ஜம்மு காஷ்மீர் மக்களின் குரல் ஒடுக்கப்பட்டிருப்பதை இந்த உலகம் பார்த்து கொண்டுதான் இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் இன்று நிலவும் அடக்குமுறை கணக்கில் அடங்கா நிலையில் உள்ளது. இந்தியா விழித்துக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இன்று அவர் வெளியிட்ட பதிவில், ‘‘இந்திய அரசியல் சாசனம் மாற்றப்பட்ட இத்தினம் இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள். ஜம்மு காஷ்மீர் தலைவர் 1947ல் இரட்டை நாடு நிலையை ஒதுக்கி விட்டு, இந்தியாவுடன் இணைந்தது இன்று எதிர்விளைவை ஏற்படுத்தி விட்டது. பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது சட்டவிரோதமானது’’ என்று தெரிவித்துள்ளார்.


Leave a reply