டெல்லியில் வாஜ்பாய் வசித்த அரசு பங்களாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா குடியேறினார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லியில் கிருஷ்ண மேனன் மார்க் சாலையில் 6ஏ என்ற எண் கொண்ட அரசு பங்களாவில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு வாஜ்பாய் மரணமடைந்தார். அதையடுத்து, அந்த இல்லத்தை அரசு எடுத்து, புனரமைத்து வந்தது.
தற்போது, அந்த இல்லத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அவர் விருப்பப்படி ஒதுக்கீடு செய்துள்ளனர். இதையடுத்து, கடந்த 15ம் தேதி அங்கு பால் காய்ச்சி கிரகப்பிரவேசம் செய்தார் அமித்ஷா. ஏற்கனவே டெல்லியில் அக்பர் சாலையில் 11ம் நம்பர் பங்களாவில் அமித்ஷா வசித்து வந்தார். தற்போது வாஜ்பாய் வசித்த வீட்டுக்கு குடியேறியிருக்கிறார்.